Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

200 பேர் சேர்ந்து தயாரிக்கும் படம்!

22 மே, 2020 - 15:24 IST
எழுத்தின் அளவு:
A-movie-made-with-200-producers

கொரோனா முடக்கிப்போட்ட தமிழ் சினிமாவை மீட்டெடுக்க பலர் களத்தில் குதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ரூ.2 கோடி பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள். ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தயாரிப்பாளராக முடியும். படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பங்கு பிரித்து தரப்படும்.

இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடன் பார்த்திபனும் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இவை அனைத்தும் முறையாக வங்கி பரிவர்த்தனை மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.

முக்கியமாக இந்த படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும். 10 வாரங்கள் அல்லது 100 நாட்களுக்கு பிறகு தான் படம் ஓடிடி, டிவி உள்ளிட்ட தளங்களில் வெளியாகும். அதேபோல் தியேட்டரில் எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகிறது என்பதை கணினி மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் எனும் முடிவுக்கு பெரிய நடிகர்கள் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
சிரிக்காதே.. உருக வைத்த அனிருத்சிரிக்காதே.. உருக வைத்த அனிருத் போலி கணக்குகளில் ஒளிந்திருக்கும் கோழைகள் - திவ்யநாயகிக்காக கோபப்பட்ட ஷெரின் போலி கணக்குகளில் ஒளிந்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

charan -  ( Posted via: Dinamalar Android App )
23 மே, 2020 - 12:33 Report Abuse
charan orupatamadri
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 மே, 2020 - 11:56 Report Abuse
skv srinivasankrishnaveni இம்பாஸிபிள்ன்னு சொல்லுறாங்க பாசிபிள் னு சொல்றாங்க எப்படியோ எந்த நடிகனுக்கு கொடியே வாரி வழங்கவே கூடாது அவாளுக்கு கண்டபடியும் காசுத்தற முடியுமே என்று ஒருசிலர் முனகுவாங்க கதை நன்னாயிருக்கவேண்டும் அவ்ளோதான்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23 மே, 2020 - 10:28 Report Abuse
Natarajan Ramanathan நல்ல முயற்சி. அனைவருக்கும் தலா ஒரு லட்சம் நஷ்டத்தோடு முடியும். கதாநாயகி நிலைதான் பாவம். படப்பிடிப்பு ஒருவருடம் நடந்தால்தான் சமாளிக்க முடியும்.
Rate this:
Covim-20 - Soriyaar land,இந்தியா
23 மே, 2020 - 09:59 Report Abuse
Covim-20 200 பேர் கூட இந்தப்படத்தை பாக்கப்போறதில்லை...
Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
23 மே, 2020 - 07:44 Report Abuse
PANDA PANDI உச்ச நடிகர் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஏன் என்றால் சம்பளம் அதிகம் வாங்கும் நபர்..அரசியல் சாக்கடையில் குதிப்பத்திற்கு முன்பு ஆதரவு தந்து தப்பித்துக்கொள்ளலாமே. விரைவில் நாக்பூரில் இருந்து உத்தரவு வாங்கிவிடவும். ONE NATION ONE SALARY.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in