Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: இரு துருவங்களை இணைத்த டி.ஆர்.ராமண்ணா

22 மே, 2020 - 14:09 IST
எழுத்தின் அளவு:
Flashback-about-director-TR-Ramanna

தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியான டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர். டி.ஆர்.ராமண்ணா. ராஜகுமாரி வளர்ந்து பெரிய நடிகை ஆன பிறகு தனது சகோதரரை இயக்குனர் ஆக்கினார். அவரது 23வது நினைவு நாள் இன்று.

டி.ஆர்.ராமண்ணா பல படங்களை இயக்கினாலும் அவரது அடையாளமாக கருதப்படும் படம் கூண்டுக்கிளி. இதற்கு காரணம் இந்த ஒரே படத்தில்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இருவரையும் இணைத்த பெருமை டி.ஆர்.ராமண்ணாவை சாரும்.

படத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முதலில் நண்பர்களாக இருப்பார்கள் பின்னர் இருவரும் எதிரும், புதிருமாக மாறுவார்கள். படம் வெளியானபோது தியேட்டர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்டதும், திரைகள் கிழிக்கப்பட்டதும், படப்பெட்டி எரிக்கப்பட்டதும் வரலாறு.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூண்டுக்கிளி பெரிய தோல்வியை அடைந்தது என்றாலும் இருதுருவங்கள் இணைந்து நடித்த ஒரே படம் என்பதால் கூண்டுக்கிளி முக்கியமான படமானது. இருவரையும் இணைத்தவர் என்பதால் டி.ஆர்.ராமண்ணாவும் முக்கிய இயக்குனரானார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு திரையுலகின் திடீர் ஆலோசனைசிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு ... கொரோனாவால் நிறுத்தப்பட்ட கிரகப்பிரவேசம் கொரோனாவால் நிறுத்தப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Pannadai Pandian - wuxi,சீனா
24 மே, 2020 - 06:43 Report Abuse
Pannadai Pandian கூண்டு கிளி தோல்வி படமா ? நம்ப முடியவில்லை....
Rate this:
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
24 மே, 2020 - 06:12 Report Abuse
Ram Mayilai நானும் அந்த திரைப்படத்தை பார்த்து உள்ளேன். அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் பக்குவம் இல்லாமல் மோதிக்கொண்டார்கள். மக்கள் திலகம் திரு.MGR அவர்கள் படத்தில் முன்பகுதியில் சிறிது நேரமும், பின்பகுதியில் சிறிது நேரம் மட்டுமே வருவார். நடிகர் திலகம் திரு. சிவாஜி அவர்கள் படம் முழுவதும் வருவார். ஒரு மோசமான நண்பனின் தப்பான வழியில் சென்று நல்ல நண்பனின் மனைவிக்கு பலவித தொல்லைகளை தரும் நெகட்டிவ் (எதிர்மறை) நாயகனான நடித்த இருப்பார். வாய்ப்பு கிடைத்தால் திரைப்படத்தை பாருங்கள்.
Rate this:
Ray - Chennai,இந்தியா
23 மே, 2020 - 19:54 Report Abuse
Ray இருவருமே இப்போது இல்லை அதேபோல அவர்களது அடிதடியில் இறங்குமளவு அதி தீவிர ரசிகர்களும் குறைந்த எண்ணிக்கையே இருப்பார்கள் எனவே அந்த படத்தை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து வெளியிடலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in