Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு திரையுலகின் திடீர் ஆலோசனை

22 மே, 2020 - 13:52 IST
எழுத்தின் அளவு:
Telugu-Film-Industry-people-meeting-at-chiranjeevi-house

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் திரைப்பட படப்பிடிப்புக்கான தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தெலுங்கு திரையுலகினர், நடிகர் சிரஞ்சீவி வீட்டில் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இதில் நாகார்ஜுனா, அல்லு அரவிந்த், இயக்குனர்கள் ராஜமவுலி, தில்ராஜ், தெலுங்கானா திரைப்படத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிப்பை எப்படி நடத்துவது, சமூக இடைவெளி விட்டு படப்பிடிப்பு நடத்த முடியுமா? வெளிப்புற படப்பிடிப்புகள் நடத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களுக்கும், பாதியில் நிற்கும் படங்களுக்கும் முன்னுரிமை கொடுப்பது என்றும், நிலைமை சீராகும் வரை புதிய படங்கள் எதையும் தொடங்காமல் இருக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக 40 படங்கள் வரை ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும், 60 படங்கள் வரை பாதியில நிற்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகம் ஆயிரம் கோடி வரை இழப்பீட்டை சந்தித்திருப்பதாவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வறுமையில் வாடும் இந்திரன்வறுமையில் வாடும் இந்திரன் பிளாஷ்பேக்: இரு துருவங்களை இணைத்த டி.ஆர்.ராமண்ணா பிளாஷ்பேக்: இரு துருவங்களை இணைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 மே, 2020 - 09:11 Report Abuse
skv srinivasankrishnaveni எண்ணப்பெரு இது டாப் சி சைடு லே சி என்று ஒருகாலத்தில் சினிமாலே நடிக்க நல்ல அழகான பெயர் உருவம் தேவை ஆனால் இன்று??????????????
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
24 மே, 2020 - 06:07 Report Abuse
 Muruga Vel என்னமோ... தண்ணி பார்ட்டிக்கு வந்த மாதிரி இருக்கே படம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in