Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் படம்?

22 மே, 2020 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Idam-Porul-Yeval-to-be-release-OTT

கொரானோ ஊரடங்கு ஓடிடி தளங்களின் மீது சினிமா ரசிகர்களின் பார்வையைத் திருப்பியிருக்கிறது. இதனால் தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பாக சில படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட சில நிறுவனங்கள் முயற்சி செய்தன.

அந்த விதத்தில் அமேசான் ஓடிடி தளம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 7 படங்களை வெளியிடப் போவதாக அதிரடியாக அறிவித்தது. இதனால் இந்தியத் திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பாக படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடும் அதே சமயத்தில் தியேட்டர்களில் வெளியிட முடியாமல் சிலபல பிரச்சினைகளால் வெளியாகாமல் தவித்துக் கொண்டிருக்கும் சில படங்களையும் வாங்க தற்போது முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

அந்த விதத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்க யுவன்ஷங்கர் ராஜா இசையில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'இடம் பொருள் ஏவல்' படமும் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தை தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் நிதிச்சிக்கலில் கடுமையாக மாட்டியதால் இந்தப் படம் உள்ளிட்ட அவர்கள் தயாரித்த சில படங்கள் முடங்கிப் போயின. அதில் சிக்கிய 'நான்தான்டா சிவா' படத்தின் இசையை இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

அதே சமயம், கொரானோ ஊரடங்கு முடிந்த பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வரமாட்டார்கள். அந்த சமயத்தில் இப்படி வெளிவராமல் சிக்கியிருக்கும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட வைக்கலாம் என்ற கருத்தும் திரையுலகில் இருக்கிறதாம்.

இப்படத்தின் வெளியீடு ஓடிடி தளமா, அல்ல தியேட்டரா என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கலகலப்பான மீம்ஸ்களில் 'கார்த்திக் டயல் செய்த எண்'கலகலப்பான மீம்ஸ்களில் 'கார்த்திக் ... வறுமையில் வாடும் இந்திரன் வறுமையில் வாடும் இந்திரன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

swa -  ( Posted via: Dinamalar Android App )
22 மே, 2020 - 19:01 Report Abuse
swa theatre karanuku ini aapu than
Rate this:
ஆதவன், மன்னார்குடி யுவன் வைரமுத்து இணைந்த அற்புதமான பாடல்களை கொண்ட படம்.. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு, விரைவில் நீங்குமென நம்புகிறோம். வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in