Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் சேரனின் ஆட்டோகிராப்

22 மே, 2020 - 09:24 IST
எழுத்தின் அளவு:
Cherans-Autograph-in-OTT

கொரோனா ஊரடங்கு கரரணமாக தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சினிமா ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே வழி ஓடிடி தான். எனவே அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஓடிடி தளங்கள் புதுப்படங்கள் மட்டுமின்றி பழைய படங்களையும் தங்கள் தளங்களில் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் ஆட்டோகிராப் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் செயலியில் ஆட்டோகிராப் படத்தை பார்த்து பலர் ரசித்து வருகின்றனர்.

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆட்டோகிராப் படத்தில் பரத்வாஜ் இசையமைத்த இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். குறிப்பாக ஞாபகம் வருதே, ஒவ்வொரு பூக்களுமே ஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ரீங்காரமிட்டன. இப்படம் காதலர்களுக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். இந்த படத்தை போலவே தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்கள் வெளிவந்தன. சில படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பயனுள்ள காலம்!பயனுள்ள காலம்! கலகலப்பான மீம்ஸ்களில் 'கார்த்திக் டயல் செய்த எண்' கலகலப்பான மீம்ஸ்களில் 'கார்த்திக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23 மே, 2020 - 04:12 Report Abuse
J.V. Iyer ஆட்டோகிராப் நல்ல திரைப்படம். சேரனின் படங்கள் எல்லாமே தரமான படங்கள். நல்ல கடத்தி அம்சம். பாராட்டுக்கள்.
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
22 மே, 2020 - 13:02 Report Abuse
Raman Muthuswamy மூன்று காதலிகளையும் விட்டு விட்டு நாயகர் திருமணம் முடிந்த பின்னர் வேறு எப்படி மறுபடியும் க்ராப் செய்ய முடியும் ?? சேரன்: உங்களது படம் கிளாசிக் ஆக இருக்கட்டும் .. புதுசா ஏதாவது பண்ணுங்க ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in