பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
'பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாக ராஜன், பிரதாப் போத்தன் என, பல நட்சத்திர பட்டாளத்துடன், ஜோதிகா நாயகியாக நடித்துள்ள, பொன்மகள் வந்தாள் படம், 29ல், ஆன்லைனில் வெளியாகிறது. படத்தை பேட்ரிக் இயக்கியுள்ளார். ஜோதிகா அளித்த பேட்டி:இது ஒரு, சமூக அக்கறையுள்ள த்ரில்லர் படம். ஐந்து இயக்குனர்களுடன் நடித்தது மறக்க முடியாதது. நடித்த படங்களிலேயே இப்படத்திற்கு தான், அதிக உழைப்பை கொடுத்துள்ளேன். நானே,'டப்பிங்' பேசியுள்ளேன். 'வெண்பா' என்றவழக்கறிஞராக நடித்துள்ளேன்.என் படங்களை, பெண்கள் பார்க்கும் போது பெருமையாக நினைக்க வேண்டும். இந்தாண்டு எனக்கு, 41 வயது; இந்த வயதில், கதை நாயகியாக நடிப்பது அரிது.கொரோனாவால் தான் இப்படத்தை ஆன்லைனில் வெளியிடுகிறோம். சின்ன பட்ஜெட் படங்களுக்கு, ஆன்லைன் தளம் நல்ல வாய்ப்பாக இருக்கும். சினிமாவின் அடுத்தகட்டமாக ஆன்லைன் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.