வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜிவி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக 96, பிகில் படங்களில் நடித்த வர்ஷா பொல்லமா நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு செல்பி என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார்.
கல்லூரி மாணவன் ஒருவனுக்கு கல்லூரிக்கு வெளியே ஏற்படும் இன்னல்களை சொல்லும் விதமாக இப்படம் தயாராகிறது. ஜிவி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.