Advertisement

சிறப்புச்செய்திகள்

மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் | 60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் ? | குறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி | திருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு : நடிகர் சிவகுமார் மீது வழக்கு | 'என்றும் வாழும் கிரேஸி' : நேரலையில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் - கமல் பங்கேற்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக் டயல் செய்த எண் - இது என்ன காதல்?

21 மே, 2020 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Karthik-Dial-Seytha-Yenn-short-film-out

விண்ணைத் தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தை கவுதம் மேனன் மீண்டும் எடுக்கப் போகிறார். அதற்கு முன்னோட்டமாக கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை எடுக்க உள்ளார் என கடந்த வாரம் முழுவதும் சினிமா ரசிகர்களிடம் இந்த கொரோனா காலத்திலும் ஒரு பரபரப்பு.

என்ன இருந்தாலும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை இன்னமும் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். நேற்று இரவு கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் இன்றைய பொழுதை போக்க ஒரு கன்டென்ட் கொடுத்துவிட்டார்கள்.

சரி, நாமும் பார்த்துவிடுவோம் என உட்கார்ந்து பார்த்தால் ஆரம்பத்திலிருந்தே சிம்பு பேசிய வசனங்களில் ஒன்றிரண்டைத் தவிர வேறு எதுவுமே காதில் சரியாக விழவில்லை. மொபைல் போனில் நேரடியாகவே வசனங்களை ரிக்கார்ட் செய்திருக்கலாம் என்பதுதான் உண்மை. ஆனால், தமிழையே சரியாகப் பேசத் தெரியாத த்ரிஷா பேசிய தமிழும், அவருடைய குரலும் அவ்வளவு தெளிவாகக் கேட்டு ஆச்சரியப்படுத்திய போது சிம்பு பேசியது கேட்டிருக்கலாம்.




சிம்பு என்ன பேசினார் என்பதைப் புரிந்து கொள்ள சப்டைட்டிலுடன் மீண்டும் குறும்படத்தைப் பார்க்க வேண்டியதாயிற்று. ஆங்கிலத்தில் வரும் வசனங்களை அப்படியே கொஞ்சம் ஏடா கூடமாக தமிழில் மொழி மாற்றம் செய்திருந்தால் ஐயகோ என்ன ஒரு ஆபாசம் என்று அதிர்ச்சியடைய வைத்திருக்கும்.

சிம்பு கண்களில் காதலுடனும் (?), ஏக்கமான உடல்மொழியுடனும், ஹஸ்கி வாய்சில் பேசிய பேச்சும் இவர் என்ன காதலனா அல்லது கள்ளக் காதலனா என நம்மைத் தவிக்க வைக்கிறது.

அதே சமயம், சிம்புவின் ஏக்கத்தையும், எண்ணத்தையும் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி த்ரிஷா பேசிய பேச்சும், பதிலாக ஐ லவ் யூ கார்த்திக் என்று சொன்ன விதத்திலும் முன்னாள் காதலி என்பதை விட ஒரு தாய்மையின் உணர்வு மேலோங்கி தெரிகிறது. நீ எனக்கு மூணாவது குழந்தை மாதிரி கார்த்திக் என சொல்லும் போது காதலை விட ஒரு வித தாய்ப்பாசமே கண்முன் தெரிகிறது. இருந்தாலும் குளோசப்பில் த்ரிஷாவின் தலை முடியில் ஒரு சில நரை முடிகளைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. கதாபாத்திரத்திற்காக அவை மேக்கப் போடப்பட்டதா அல்லது நிஜமாகவே த்ரிஷாவின் தலைமுடிகள் நரைக்க ஆரம்பித்துவிட்டதா என த்ரிஷாவின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி வந்திருக்கும்.




12 நிமிடக் குறுங்கதை என்ன சொல்ல வருகிறது என்பதை தன் இசையால் அப்படியே வருட விட்டிருக்கிறார் ஏஆர் ரகுமான். அதிலும் முடிவில் அவருடைய பின்னணிக் குரல் என்னவோ செய்வதும் உண்மைதான்.

மொபைல் கேமராவில் எடுக்கப்பட்டவைதான் என்பது உண்மை என்றால் அதில் படம் பிடித்தவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

சரி, ஒரு டவுட்டு. இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் நண்பர்களை சந்திக்க முடியாதவர்கள் கூட வாட்சப் வீடியோ கால், ஜும் வீடியோ கால் என குழுவாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். லுடோ விளையாடுவதைக் கூட வீடியோ கால் செய்து கொண்டுதான் விளையாடுகிறார்கள்.

அப்படியிருக்க கார்த்திக்கும், ஜெஸ்ஸியும் வீடியோ காலில் பேசியிருக்கலாமே ?.

கார்த்திக் டயல் செய்த எண் - ராங் கால்


குறும்படத்தை காண அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்க... - https://www.youtube.com/watch?v=sO5a-_K-bFU&feature=youtu.be

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: பாலுமகேந்திராவின் நிறைவேறாத கனவுபிளாஷ்பேக்: பாலுமகேந்திராவின் ... சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனை உடன் அரசு அனுமதி சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muruga Vel - Mumbai,இந்தியா
22 மே, 2020 - 14:04 Report Abuse
 Muruga Vel அம்மணிக்கு அம்மா வயசு ஆகுதே ..
Rate this:
21 மே, 2020 - 17:32 Report Abuse
Velan, Chennai மீண்டும் ஒரு கள்ள காதல் கதை.. வசனத்தில் இருந்த ஒழுங்கின்மை இதனை வெறுக்க வைத்து விட்டது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in