ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
இலங்கையில் உள்ள மட்டகிளப்பை சேர்ந்தவர் பாலுமகேந்திரா. புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்த அவர், தனது சொந்த நாடான இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழில் படம் இயக்கும் ஆசையில் சென்றார். ஆனால் அங்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தமிழ்நாடு திரும்பிய அவர் இங்கு படங்கள் இயக்க ஆரம்பித்தார்.
பாலுமகேந்திரா 30க்கும் குறைவான படங்களே இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு ஆகிய படங்கள் தமிழ்சினிமா ரசிகர்களின் நினைவில் என்றும் நீங்காமல் இருப்பவை.
கதாபாத்திரங்கள் வெறுமனே பேசிவிட்டு நாடகத்தைப் போல வெளியே சென்றுகொண்டிருந்த தமிழ் சினிமாவில், ஒவ்வொரு ஷாட்டிலும் அந்தந்த தருணத்துக்கு ஏற்ற கனத்த மன உணர்வை, சோகத்தை, காதலை, மௌனத்தை உணர்த்திவிடும் காட்சிகள் அவருடையவை.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் அங்கு நடந்த போராட்டமும், போரினால் உயிரிழந்த மக்களின் வலியும் அவரை பாதித்திருந்தன. அவரது உறவினர்களில் ஒருசிலர்தான் இப்போதும் உயிரோடு உள்ளனர்.
அதனால் இலங்கை போரால் வாழ்க்கை இழந்த மக்களின் வலியை ஒரு முழுநீள திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பது அவரது நீண்டகால கனவாக இருந்தது. இதற்கான கதையையும் எழுத ஆரம்பித்திருந்தார். ஆனால் அந்த கனவு நிறைவேறவே இல்லை.