பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் வருகிற 29ந் தேதி ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவருகிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா ஊரடங்கு காலம் முடிந்து எப்போது வேண்டுமானாலும் தியேட்டர்கள் திறக்கப்படலாம். அதுவரை படத்தை நேரடியாக பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது பலனளிக்கும் என்று நாங்கள் நம்பினோம். மேலும், ஓடிடி தளம் மூலம் ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் 200 நாடுகளில் வெளியாவது பெருமையான விஷயம்.
இதற்கு முன் நான் போலீசாக நடித்திருந்தாலும் அதைவிட வக்கீலாக நடிப்பது கடினமாக இருந்தது. வட இந்திய பெண்ணான நான் கோர்ட் காட்சிகளில் 30 பக்க வசனம் வரை பேச வேண்டியது இருந்தது. சிலர் உதவியுடன் ஒரே டேக்கில் பல காட்சிகளில் பேசி முடித்தேன். நானே டப்பிங்கும் பேசி உள்ளேன்.
எனது முந்தைய படங்களை போலவே இதிலும் ஒரு சமூக கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற தமிழ் இயக்குனர்களான பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், தியாகராஜன், மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோருடன் பணியாற்றியது நடிப்பு பற்றி, சினிமா பற்றி இன்னும் கற்றுக் கொள்ள உதவியது. 36 வயதினிலே, மகளிர் மட்டும், ராட்சசி, பொன்மகள் வந்தாள் என தொடர்ந்து கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து வருகிறேன்.
சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அந்த கேரக்டரில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள். கொரோனாவும், அதைத் தொடர்ந்து வந்த ஊரடங்கும் நமக்கு சில பாடங்களை நடத்தியுள்ளது. அதை புரிந்து கொண்டு நம் வருங்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். என்கிறார் ஜோதிகா.