கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
திரைப்பட பின்னணி பாடகிகளில் பி.சுசீலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் பி.லீலாவை தெரியுமா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் தெரியாது என்று சொல்வார்கள். ஆனால் கீழ் கண்ட பாடல்களை அவர்கள் அடிக்கடி முனுமுனுத்திருப்பார்கள்.
"மாயமே நானறியேன் ..."
"கண்ணுடன் கலந்திடும் சுப தினமே ..."
"மாப்பிள்ளை டோய்... மாப்பிள்ளை டோய்..."
"வெண்ணிலவே தன்மதியே என்னுடனே வாவா .."
"நீதானா என்னை அழைத்தது ..."
"நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும்...."
இப்படியான ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர்தான் பி.லீலா. அவரின் 86வது பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
பி.லீலா. கேரள மாநிலம், பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது மகளாக பிறந்தார். அப்பா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இசை, பாடல்கள் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். அதை தன் மகள்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் பி.லீலா.
பி.லீலாவுக்கு அப்போது பிரபலமாக இருந்த மணிபாகவதர் முதல் குருவாக இருந்து முறையான சங்கீத பயிற்சி அளித்து சீராக்கினார். பின்னர் பத்தமடை கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் என பல சங்கீத மேதைகளிடம் பயின்று இசை திறமையை வளர்த்துக்கொண்டார்.
12 வயதில் சென்னை ஆந்திர மகிள சபாவில் லீலா செய்த கச்சேரி, அவரை மிக பிரபலம் ஆக்கியது. பின்னர் தென்னிந்தியா முழுக்க பல கச்சேரிகள் செய்தார்.
1948ல் திரைத்துறையில் நுழைந்தார். 1968 வரை 20 ஆண்டுகள் தொடர்ந்தது. தென்னிந்திய மொழிகளில் 7000 பாடல்களை பாடி முடித்தார். எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பாடினார்.
வயது முதுமை காரணமாக பல ஆண்டுகள் பாடாமல் இருந்த அவர் இளையராஜா கேட்டுக் கொண்டதன் பேரில் அவரது இசையில் பாசில் இயக்கத்தில் உருவான, கற்பூர முல்லை என்ற படத்திற்காக "ஸ்ரீசிவ சுத பத கமல" என்ற பாடலை பாடி கொடுத்தார். இதுதான் அவர் பாடிய கடைசி பாடல்.
ஞானகோகிலம் , ஞானமணி, கலாரத்னம், கானவர்ஷினி என பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர் பி.லீலா. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். கேரள, தெலுங்கு திரை உலகமும் பல விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியது.
சென்னையில் தனது சகோதரி வீட்டில் தனது இறுதி காலத்தை கழித்த பி.லீலா, தனது 76வது வயதில் காலமானார். அவர் இறந்த மறு வருடம் மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கியது.