சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வில்லன்கள் ஹீரோவாகும் காலம் இது. அந்த வரிசையில் தற்போது நிஜ ஹீரோவானவர் சோனுசூட். சந்திரமுகி, ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் சோனு சூட், அடிப்படையில் பாலிவுட் நடிகர்.
கொரோனா கால சேவையில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். மும்பையில் உள்ள தனது ஓட்டலை கொரோனா பணிசெய்யும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கி இருக்கிறார். இதுதவிர புலம்பெயர்ந்து மும்பையில் தங்கி இருக்கும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு பொருளை வழங்கி வருகிறார். .
தற்போது மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பிற மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். ஏற்கெனவே மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியும் வைத்தார்.
இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் பேருந்து ஏற்பாடு செய்துள்ளார் சோனு சூட். இதற்காக உ.பி அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னை பொறுத்தவரை இது ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். இந்த தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு இப்படி தெருக்களில் அலைந்து திரிவதை பார்க்கையில் மனம் வலிக்கிறது. கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன். இது என் இதயத்துக்கு நெருக்கமான விஷயமாக உள்ளது. இதற்காக என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுப்பேன்.
இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.