விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
சார்மி, என்றால் யார் என்பது இன்றைய சினிமா ரசிகர்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். சிம்பு கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தின் அறிமுகக் கதாநாயகிதான் சார்மி.
அதன்பின் 'காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்தார். கடந்த 17 வருடங்களாக அதிகமான தெலுங்குப் படங்களிலும் ஒரு சில மலையாள, கன்னட, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
சார்மி கதாநாயகியாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'ஜோதி லட்சுமி'. ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்தப் படம் வந்த போதே நடிப்பை விட்டு விலக முடிவு செய்திருந்தாராம். ஆனால், தற்போது நடிப்பை விட்டு முழுமையாக விலகுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் சார்மி.
சிம்புவின் அறிமுகக் கதாநாயகி அதற்குள் நடிப்பிலிருந்து விலகுவது ஆச்சரியம்தான். சார்மி அறிமுகமான காலத்தில் அறிமுகமான த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் இன்னமும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சார்மி நேற்று(மே 17) தனது பிறந்தநாளை வீட்டில் இருந்தபடியே கேக் வெட்டி கொண்டாடினார்.