நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
சாக்லெட் ஹீரோவான ஸ்ரீகாந்துக்கு இடையில் ஒரு சின்ன பிரேக் ஏற்பட்டது. தற்போது தனது சாக்லெட் பாய் இமேஜை மாற்றி வில்லன், காமெடியன் என கலந்து நடிக்க ஆரம்பித்திருப்பதால் மீண்டும் பிசியான நடிகர் ஆகிவிட்டார். நிறைய படங்களில் நடிக்க தொடங்கி இருந்த நேரத்தில் அந்த வேகத்திற்கு கொரோனா தடை போட்டு விட்டதாக வருத்தத்துடன் கூறகிறார் ஸ்ரீகாந்த்.
மேலும் அவர் கூறியதாவது: நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும், மிருகா படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக மிருகா இருக்கும். நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் மஹா படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் துப்பறியும் திரில்லராக உருவாகி வருகிறது. பாதி படம் முடிந்து விட்டது.
அதேபோல், நானும், விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கும் படம் காக்கி. இப்படத்தில் இரு கதாநாயகிகள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், எனக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள். ஆனால், அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கிறது.
அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதுவும் பாதியில் நிற்கிறது. இந்த படங்களுக்குப் பிறகு இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறேன். ஆனால் எல்லாமே கொரோனாவால் தடைபட்டு நிற்கிறது. விரைவில் அனைத்து படங்களும் முடிந்து தியேட்டரில் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் ஸ்ரீகாந்த்.