நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
ஒரே ஒரு கண்ணசைவு மூலம் ஓஹோவென புகழ்பெற்றவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு அடுத்த படமே ஸ்ரீதேவி பங்களா என்ற பாலிவுட் படம். அதன் பிறகு கன்னடத்தில் கிரிக் லவ் ஸ்டோரி, தெலுங்கில் லவ்வர்ஸ் டே படங்களில் நடித்தார். அப்புறம் அவ்வளவுதான் வந்த வேகத்தில் காணாமல் போனார்.
சினிமாவில் அதிகம் நடிக்காவிட்டாலும் இன்ஸ்ட்ராகிராமில் பிசியாக இருந்தார். 72 லட்சம் பேர் அவரை பின் தொடர்ந்தார்கள். தற்போது திடீரென இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறி விட்டார்.
காரணம் சினிமா வாய்ப்பு இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்துகிறாரராம். படிப்புக்கு இன்ஸ்ட்ராகிராம் தடையாக இருப்பதால் விலகி விட்டாராம். ஆனாலும் அவரது ரசிகர்கள் அவர் பெயரில் கணக்கு வைத்து அதனை தொடர்கிறார்கள்.