தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
தெலுங்கு சினிமாவின் இன்றும் நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி.. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 220 படங்களுக்கு மேல் இசையமைத்தவர்..
பாகுபலி படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இந்திய அளவில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.. கிட்டத்தட்ட முப்பது வருடமாக இசைப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடம் மரகதமணி என்கிற பெயரிலும் நன்கு அறிமுகமானவர் தான்.
தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு இசையமைத்து வரும் கீரவாணி, சமீபத்தில் ஒரு பேட்டியின்போது விரைவில் தான் இசைத்துறையை விட்டு ஓய்வுபெற்ற போவதாக கூறியுள்ளார்.. இசையமைப்பது என்பதும் மற்ற வேலைகளை போல ஒய்வு பெறக்கூடிய ஒரு வேலைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவிதமாக 2021ல் வெளியாகப்போகும் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் தான் இவர் இசையமைக்கும் கடைசிப்படமாக இருந்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.