ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் படம் “மேதாவி”. இந்த படத்தை பிரபல பாடல் ஆசிரியர் பா.விஜய் இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் அர்ஜூன் - ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.
சிவ ஷாரா, தீனா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா ஆகியோருடன், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு செய்ய, சான்லோகேஸ் படத்தொகுப்பை கவணிக்கிறார்.
கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சரியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.