சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியில் சிறந்த இயக்குனராக மாதவன் தேர்வு | சீதை வேடத்தில் நடிக்க அசைவம் தவிர்த்தேன்: கீர்த்தி சனோன் | ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை | பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! | போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி | நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரை செல்வி! | நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி! | என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் | நடிகர் கமல்ஹாசனுக்கு ‛வாழ்நாள் சாதனையாளர்' விருது : ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார் | அஞ்சலியின் 50வது படம் 'ஈகை': பர்ஸ்ட் லுக் வெளியீடு |
ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் திரைப் பிரபலங்கள் பெரும்பாலும் உடற்பயிற்சி அல்லது சமையல் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகர் சிம்புவும் தனது புதிய சமையல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சிம்பு சமைக்க, அவர் அருகே விடிவி கணேசன் இருக்கிறார். அப்போது, 'சிம்புவுக்கு வரப்போகும் மனைவி கொடுத்து வைத்தவர்' என விடிவி கணேசன் பாராட்டுகிறார். அதற்கு, 'மனைவி என்பவள் சமைக்கத்தான் வருகிறாளா? அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். நானென்னால் என் மனைவியை அப்படித்தான் பார்த்துக் கொள்வேன்' என கூறுகிறார் சிம்பு.
சமூகவலைதளத்தில் வெளியான இந்த வீடியோவைப் பார்த்து, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் சிம்புவைப் பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக நடிகை பிந்து மாதவி வெளியிட்டுள்ள பதிவில், “நல்ல எண்ணம் சிம்பு. உங்கள் மனைவியைப் பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.