Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புஷ்பா : விஜய்சேதுபதி விலக இதுதான் காரணமா?

15 மே, 2020 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Why-vijaysethupathi-out-from-Pushpa-film

நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரை தனது நடிப்பு எல்லையை தமிழ்நாட்டுடன் நிறுத்திக் கொள்ள விரும்பாமல் மலையாளம், தெலுங்கு என கிளை பரப்பி வருகிறார். அதற்கேற்றபடி அவருக்கு வரவேற்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா' என்கிற படத்தில் வனத்துறை அதிகாரியாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அந்தப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொண்டதாகவும் அவருக்கு பதிலாக பாபி சிம்ஹா அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநில போலீஸாரால் செம்மரம் கடத்தியதாக கிட்டத்தட்ட 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது அந்த சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்த புஷ்பா படம் உருவாகி வருகிறது. இதில் தமிழர்களை செம்மர கடத்தல்காரர்களாக சித்தரிப்பதை விஜய்சேதுபதி விரும்பவில்லையாம்.. மேலும் அவரது வனத்துறை அதிகாரி வேடமும் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வில்லத்தனமான கதாபாத்திரம் என்பதால் தமிழர்களுக்கு எதிரானவன் என தேவையில்லாமல் முத்திரை குத்திக்கொள்ள வேண்டாம் என்பதும் இந்தப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள காரணம் என்று சொல்லபடுகிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
வரவேற்புக்கு நன்றி!வரவேற்புக்கு நன்றி! ராணாவின் காதலி யார் தெரியுமா..? ராணாவின் காதலி யார் தெரியுமா..?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

sankar - Nellai,இந்தியா
18 மே, 2020 - 19:45 Report Abuse
sankar இவனுக்கு எல்லாம் இனிமே ..........
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) ஒனக்கு நடிப்பு வராது பேசாம கிருஸ்தவ மதபோதகராகிடு நல்லா காசு பாக்கலாம்
Rate this:
Balaji - Chennai,இந்தியா
17 மே, 2020 - 13:47 Report Abuse
Balaji தமிழ் காக்க பிறந்த அண்ணலே... வாழ்க வாழ்க.. என்னத்தா சொல்ல. இங்க மார்க்கெட் ஆட்டம் கண்டுடும்னு பயமா இருக்கும்.... மீம்ஸ் போட்டு செஞ்சிருவாங்கல்ல... நடிக்க ஒத்துகிட்டப்பா என்ன ரோல் னு தெரியலையாக்கும்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17 மே, 2020 - 05:04 Report Abuse
J.V. Iyer விஜய் சேதுபதிக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராது. அவர் நல்ல கதைகளில் நடிப்பதால் பெயர் இருந்தது. தலை கனத்தால், சமீபத்தில் நிறைய டப்பா படங்களில் நடித்து நொடித்து போய்விட்டார். மேலும் ஹிந்துக்களுக்கு எதிராக பேசியும், செயல்பட்டும் அவர் நடிப்புலக மேடையில் காணாமல் போனது வியப்பில்லை.
Rate this:
MPK - Chennai,இந்தியா
16 மே, 2020 - 12:43 Report Abuse
MPK டேய் சும்மா நல்லவன் வேசம் போடதே, உன் வேசம் கலந்து விட்டது, இந்து மதத்தை, இந்து கடவுள்களை பற்றி இழிவாக பேசுவதற்கு, மாஸ்டர் என்கிற பாஸ்டர் எவ்வளவு கொடுத்தால், இதுக்கு நீ வேலை பார்க்கலாம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in