Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மதுரை சலூன் கடைக்காரரின் மனிதநேயம் - பாராட்டி, மகளின் கல்வி செலவை ஏற்ற பார்த்திபன்

14 மே, 2020 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Parthiban-honored-Madurai-saloon-shop-owner-Mohan

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லைதோப்பு கொரோனாவால் பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாலர்களை அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறுசிறு உதவிகளை செய்து வந்தார். தனது மகளின் மேற்படிப்புக்காக பல ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்து, சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது மகள் நேத்ரா அந்த பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 6000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார்.

இந்த செய்தியை கேட்ட நடிகர் பார்த்திபன், நேத்ராவின் கல்வி செலவை ஏற்றுள்ளார். பார்த்திபன் கூறுகையில், இந்த செய்தி என்னை பெரிதாக பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்துக் கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டு புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள், என அனைத்தையும் அவர்களுக்கு நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி எனது பார்த்திபன் மனித நேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன். மேலும், நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளி படிப்புக்குரிய அனைத்து செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன்.

பார்த்திபன் மனித நேய மன்றத்தின் சார்பாக இது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு இந்த நிகழ்வு பெரும் மனநிறைவை அளித்தது என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
நோ மீன்ஸ் நோ!நோ மீன்ஸ் நோ! எமி அறிவுரை! எமி அறிவுரை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Raja - Thoothukudi,இந்தியா
17 மே, 2020 - 22:12 Report Abuse
Raja எண்பது கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்ன செய்கிறார்கள்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
16 மே, 2020 - 11:38 Report Abuse
Bhaskaran அவரதுஉயர் கல்வி செலவுகளை எல்லாம் அகரம் மூலம் செய்யஏற்பாடு செய்யுங்கள் சார்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 மே, 2020 - 10:19 Report Abuse
skv srinivasankrishnaveni சலூன்காரரின் வருமானமலே சேமிச்சதை அள்ளிக்கொடுத்தாரே எல்லா எம் எல் ஏ /எம் பி மந்திரிகள் எல்லாம் எவ்ளோலக்ஷம் வாங்கிண்டுருக்கா எவ்ளோதந்துருக்காங்க எண்ணிப்பார்க்கவும்
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
15 மே, 2020 - 10:15 Report Abuse
jayanantham பெண்ணின் கல்வி செலவை பார்த்திபன் ஏற்றுக்கொண்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனும் பட்சத்தில், அது உண்மையி ல் பாராட்டுக்குரியது.
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் kadaikkaarar moganukku ulamaarntha paaraattukal
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in