முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
கொரானோ ஊரடங்கு காலத்தில் பல நடிகர்கள், நடிகைகள் சொந்தமாக யு-டியுப் சேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து நடத்துவார்களா அல்லது இப்போது வேலை இல்லை என்பதற்காக ஆரம்பித்தார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான்கான் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அவருடைய பெயரிலேயே புதிதாக யு-டியுப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் அவரே பாடி, நடித்த பாடல் வீடியோ ஒன்றை மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். அது தற்போது வரை 96 லட்சம் பார்வைகளைப் பெற்றது.
இரு தினங்களுக்கு முன்பு 'தேரே பினா' என்ற மற்றொரு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரும் ஜாக்குலின் பெர்னாண்டஸும் நடித்துள்ள அந்த வீடியோ இரண்டு நாட்களுக்குள் 1 கோடியே 70 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலையும் சல்மான்கான்தான் பாடியுள்ளார்.
25 நாட்களுக்குள் 10 லட்சம் பாலோயர்களை இந்த யு டியூப் சேனல் பெற்றுள்ளது. மிக விரைவில் ஒரு யு டியூப் சேனல் அவ்வளவு பாலோயர்களைப் பெற்றுள்ளதும் ஒரு சாதனை என்கிறார்கள். சல்மான்கானுக்கு மற்றுமொரு வருமானம்.