Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

80களின் நாயகியர் அசத்தும் 'ஓ அந்த நாட்கள்'

12 மே, 2020 - 15:40 IST
எழுத்தின் அளவு:
80s-actress-Oh-Andha-Naatkal-movie

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் 'ஓ அந்த நாட்கள்' எனும் 'ரொமாண்டிக் காமெடி' திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடித்திருக்கின்றனர்.

1980'களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாக கொண்டும், குடும்ப பாங்கான கதையை எடுத்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

இப்படத்தில், ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் இணைந்து ஜித்தின் ராஜ், லதா ஹெக்டே ஜோடியும், ஒய்.ஜி.மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் படமாகி உள்ளது.

ஷரன் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. முதற்கட்டமாக மெட்ராஸ் என்ன என்ற முதல்பாடலை யு-டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'கபடதாரி' - பின்னணி வேலை தொடங்கியது'கபடதாரி' - பின்னணி வேலை தொடங்கியது ஓடிடியில் ஜகமே தந்திரம் ரிலீஸாக வாய்ப்பு ஓடிடியில் ஜகமே தந்திரம் ரிலீஸாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
13 மே, 2020 - 12:05 Report Abuse
Bhaskaran பாட்டிகளின் குத்தாட்டம் என்று பெயர் வைத்திருக்கலாம்
Rate this:
13 மே, 2020 - 09:25 Report Abuse
susainathan why India there is no place to take movie at all or theyre not feeling comfortable for bedroom
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in