Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலீசிடம் ஆட்டோகிராப் வாங்கிய சூரி

12 மே, 2020 - 15:22 IST
எழுத்தின் அளவு:
Actor-soori-got-autograph-from-police

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. கொரோனா ஊரடங்கில் ஆரம்பத்தில் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து வீட்டில் இருந்தபடியே வீடியோ எடுத்து மக்களை மகிழ்த்து கொண்டிருந்தார். தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார். இவரது வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இந்நிலையில் சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 போலீஸ் ஸ்டைஷனுக்கு வருகை தந்தார் சூரி. அங்கிருந்த போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

சூரி கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் போலீஸார். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் தற்போது போலீசார் நாம் எல்லோருக்கும் எல்லை சாமி.
கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக போலீசாரையும் வணங்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் இந்த கொரோனாவை அவர்களை விட்டு வைக்கவில்லை. இது வரை 60 போலீசார் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.
சினிமாவில் தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் இவர்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்று இன்று இங்கு வந்தேன். காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், இவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ் நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும்” என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வெளிநாட்டு பேட்மிண்டன் வீரருடன் டாப்ஸி காதல் ?வெளிநாட்டு பேட்மிண்டன் வீரருடன் ... 'கபடதாரி' - பின்னணி வேலை தொடங்கியது 'கபடதாரி' - பின்னணி வேலை தொடங்கியது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

LAX - Trichy,இந்தியா
13 மே, 2020 - 04:19 Report Abuse
LAX யப்பா.. தாங்கலடா சாமி.. இதெல்லாம் விட்டுட்டு, காமடிங்கற பேர்ல சினிமாவுல போலீஸ் யூனிஃபாம் போட்டுட்டு கேவலமா நடந்துக்கற காட்சிகள தவிர்த்தாலே, உண்மையான மரியாதை விளங்கும்.. இவரு கூட நடிக்கற ஆள் சி.கா. வுடன் சேர்ந்துகொண்டு.. அவருக்கு அந்த பொருத்தமற்ற யூனிஃபார்ம், அப்புறம் இன்னொரு படம்.. அதென்ன.. சீமராஜா வா.. சீமண்ண ராஜா வா..? ஹைய்யோ கொடுமடா.. சாமி..
Rate this:
Ramaji -  ( Posted via: Dinamalar Android App )
12 மே, 2020 - 18:11 Report Abuse
Ramaji போதும் போதும் பிள்ளை குட்டிங்கள படிக்க வையுங்க போங்க
Rate this:
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
12 மே, 2020 - 18:11 Report Abuse
babu Would have appreciated more if he had used his hotels to prepare food and distribute it to the needy. Not TIK TOKS and gimmicks like this. Learn from Rajni Kanth, Lawrence, Sonu Sood (Not just giving money) how to help during crisis.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in