Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லன் நடிகர் சோனு சூட்டின் அடுத்த அற்புதமான செயல்

12 மே, 2020 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Villain-Actor-Sonu-Sood-helps-to-other-state-workers

கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை நிமித்தமாக தங்களது சொந்த ஊரை விட்டு வந்த பல தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்தனர்.

மும்பையில் அப்படி வந்து தவித்த சுமார் 350 வெளிமாநிலத் தொழிலாளர்களை வில்லன் நடிகர் சோனு சூட் 10 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைத்தார். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றையும் அப்போது அவர் கொடுத்தார்.

ஏற்கெனவே தனக்கு சொந்தமான ஹோட்டலை கொரோனா சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கினார். நேற்றைய அவரது செயலுக்கும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அப்போது ஒருவரது பாராட்டுக்கு 'நானும் பிழைக்க வந்தவன் தான்' என பதிலளித்துள்ளார். சோனு சூட் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து நடிப்பதற்காக மும்பை வந்தவர்.

தமிழில் தான் அவர் முதன் முதலில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் நடித்த 'கள்ளழகர்' படம்தான் அவருடைய முதல் படம். அடுத்து விஜய் நடித்த 'நெஞ்சினிலே' படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு, ஹிந்தி என நடித்து தற்போது பிஸியான ஒரு நடிகராக இருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் 'தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் கற்கும் 'பூமி' நடிகை நிதி அகர்வால்தமிழ் கற்கும் 'பூமி' நடிகை நிதி ... 'இந்தியன் 2' மீண்டும் ஆரம்பமான வேலை 'இந்தியன் 2' மீண்டும் ஆரம்பமான வேலை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14 மே, 2020 - 04:45 Report Abuse
J.V. Iyer நிஜவாழ்க்கையில் வில்லன்கள் ஹீரோக்களாக இருக்கிறார்கள். அந்த காலத்தில் நம்பியார். ஆனால் இந்த கால ஹீரோக்கள் நிஜவாழ்வில் வில்லன்களாக இருக்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள். ஹீரோக்கள் நிஜவாழ்வில் ஹீரோக்களாக இருப்பவர்கள், இருந்தவர்கள் என்று பார்த்தால் மக்கள் திலகம், நடிகர் திலகம், மக்கள் கலைஞர் ஜெய் சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜனி, தல அஜித் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12 மே, 2020 - 22:06 Report Abuse
Natarajan Ramanathan இவரை வில்லன் நடிகர் என்று சொல்வதே தவறுதான். உண்மையான ஹீரோ இவர்.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
12 மே, 2020 - 19:21 Report Abuse
Loganathaiyyan பரவாயில்லையே மனித நேயம் இருக்கின்றதே டாஸ்மாக் நாட்டு சினிமாவில் நடித்த பின்னும் கூட
Rate this:
Venkat - Chennai,இந்தியா
12 மே, 2020 - 17:31 Report Abuse
Venkat அண்ணன் விஜய் சேதுபதி இப்புடி பண்ணலாமே ..இத விட்டுட்டு ஒன்லி குறிப்பிட்ட மதத்தை மட்டும் பற்றி பேசி விளம்பர தேடறதுக்கு பதில் சோனு மாதிரி பண்ணலாமே..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12 மே, 2020 - 19:05Report Abuse
Mirthika Sathiamoorthiஅண்ணாத்தே விஜயசேதுபதி எதுக்கு முபையில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு உதவனும்? அங்கே இருக்கிற அமிதாப்பு சாருக்கு போன்ற பாலிவுட் அண்ணாத்தையெல்லாம் கம்ன்னு இருக்கிறப்ப?...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
12 மே, 2020 - 13:14 Report Abuse
Ellamman நம்ம ஊரு பரட்டை twitter போராளி. சும்மா ஒப்புக்கு ஒரு பதிவு மட்டும் போட்டுவிட்டு அதுவும் கால தாமதத்துக்கு பிறகு... வெளிக்கதவை மூடிக்கொள்வார்... எச்சில் கையால் கூட காக்காய் ஓட்டமாட்டார். மற்றவர்களை.. தங்கள் ரசிக குஞ்சுகளை செலவு செய்யவைத்து.. அங்கு தான் புகைப்படத்தை பெரிதாக போட்டுக் கொள்ளும் கயமை நிறைந்தவர்...
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
12 மே, 2020 - 15:25Report Abuse
Venkateshஏன்டா திராவிட விசுவாச உபியா நீ ..கோமாவில் இருந்தாயா என்ன ?? உனக்கு வந்து தானம் பண்ணுவாங்களா ??...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12 மே, 2020 - 18:40Report Abuse
Mirthika Sathiamoorthiமும்பையில் அவ்வளவு நடிகர்கள் அதுவும் கட்சி சார்ந்து பலர் இருக்கிறப்ப எதுக்கு இங்கிருந்த பரட்டை வட மாநில தொழிலாளருக்கு உதவனும்? தமிழ்நாடுன்னாகூட பரவாயில்லை..அதுக்கும் வாயில் தமிழக அரசே அந்த பொறுப்பை ஏத்துக்கிச்சு..பின்ன எதுக்கு அந்த மனுஷன் சம்பந்தமே இல்லாமல் இந்த கருத்தை போட்டாரு?. அப்போ சோனு சூட்டை அடுத்த தமிழக முதல்வராக்கிடலாமான்னு அந்த கருத்து கந்தசாமியிடம் கேட்டு சொல்லுங்க....இல்லை அடுத்த சூப்பர்சுட்டாருன்னு ரஜினியை தூக்கிட்டு சோனுவை ஆகிடலாமான்னு கேளுங்க? சோனுதான் சாப்பிட்ட கையோட காக்க ஓட்டுறாரே...அப்படிப்பட்டவர் நம் முதல்வரானால் எப்புடி இருக்கும்...அட்லீஸ்ட் சூப்பர்ஸ்டாராணவாது ரசிக குஞ்சுகள் விசிலடிக்க இங்க ஒருபயலுக்கும் காண்டாவாது...எச்சிக்கையில் காக்க ஒட்டாத நம் தமிழ் நடிக்கணுக்களை புடிக்காதா குறிப்ப பரட்டை புடிக்காத அதனை நால்லவுள்ளங்களும் மும்பை சென்று சோனு வீட்டின் முன் உணாவிரதம் இருந்து அவரை தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து முதல்வராக வேண்டிகொள்வதுடன் நில்லாமல் அந்த நல்ல மனுஷனுக்காக நாயாய் நல்ல கவனிங்க நாயாய் உழைத்து அவரை முதல்வாரக்கோவோம் என மண்ணிலடித்து சத்தியம் செய்யுவோம்...ஒரு சந்தேகம் பாலிவுட் நடிகர்கள் என்ன செஞ்சாங்க? இதப்பாத்து மும்பை மக்கள் நம்மள மாதிரி இவரை மகாராஷ்டிரா முதல்வராக்க நெனச்சா? தமிழ்நாட்டுக்கு? இல்லை மகாராஷ்டிராவுக்கு..? ஒரே காணபியூஷன்....ஐடியா, பேசாம மோடியை தூக்கிட்டு இவரை பிரதமராக்கிடுவோம்...எல்ல மாநிலங்களுக்கும் பொதுவா...என்னன்னே சரிதானே? நீங்க மனசுல நெனச்சதை சொல்லிட்டேனா?...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in