ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
2014ம் ஆண்டு வெளிவந்த யாமிருக்கே பயமே பெரிய வெற்றி பெற்றது. காமெடி பேய் படங்களில் காஞ்சனாவுக்கு அடுத்த இடத்தை பிடித்தது. இதனை டீகே இயக்கி இருந்தார். ஆர்.எஸ்.என்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் 2ம் பாகம் தயாராக இருப்பதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் இரண்டாவது பாகத்துக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. 2ம் பாகத்தை டீகே இயக்குகிறார். ஆனால் முதல் பாகத்தில் நடித்த யாரும் இதில் நடிக்க வில்லை என்று தெரிகிறது.
படத்தில் நடிக்க பெரிய நடிகர்கள், நடிகைகளுடன் பேச்சு நடந்து வருகிறது. படமும் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முறையான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.