பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் | படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு |
நடிகை ரைசா வில்சன் எப்போதும் ஜாலியாக பேசக்கூடியவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் அவர், ரசிகர்கள் எந்த மாதிரியான கேள்வி கேட்டாலும் தயக்கம் இல்லாமல் பதில் அளிப்பார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரைசாவும், ஹரிஷ் கல்யாணும் நண்பர்களானார்கள். பின்னர் பியார் பிரேமா காதல் படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அந்த படத்தில் இருவருக்குள்ளும் இருந்த கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக ரசிகர்கள் நினைக்கின்றனர்.
எனவே ரைசாவிடன் பேசும்போதெல்லாம் ஹரிஷ் பற்றி ரசிகர்கள் கேட்பது வழக்கம். அவரும் அதற்கு தனது பாணியில் ஜாலியாக பதில் அளித்துவிடுகிறார். ஆனால் சில நேரம் அது அவருக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது.
சமீபத்தில்கூட ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ஹரிஷை திருமணம் செய்துகொள்ளப் போவதாக ரைசா விளையாட்டாக பதில் அளித்தார். ஆனால் அது பரபரப்பை கிளப்பிவிட்டது. இதையடுத்து ரைசாவை செல்போனில் தொடர்புகொண்டு, இப்படியெல்லாம் லூஸ்டாக் விடாதே என ஹரிஷ் அறிவுரை வழங்கியதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இப்போதும் நீங்க சிங்கிள் தானா என ரைசாவிடன் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், எரியிற நெருப்புல பெட்ரோல் ஊத்தாதீங்க ப்ரோ என கேட்டுக்கொண்டார். கடந்த கால சம்பவங்களுக்கு ஏற்பட்ட பின்விளைவுகள் தான் ரைசாவை இப்படி உஷாராக்கி இருக்கிறது.