சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகிவிட்டன. இன்னும் இரண்டு நாட்களில் பின் தயாரிப்புப் பணிகள் மட்டும் ஆரம்பமாக தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இருந்தாலும் ஜுன் முதல் வாரத்தில் திறக்கப்படலாம் என்கிறார்கள். அப்படியே திறந்தாலும் மக்கள் வருவார்களா என்பதும் கேள்வி.
சினிமாத் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலை கருத்தில் கொண்டு சில சிறிய நடிகர்கள் அவர்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளனர். விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், உதயா, அருள்தாஸ் ஆகிய நடிகர்கள், இயக்குனர் ஹரி அது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவர்கள முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என பல தயாரிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.
ஆனால், முன்னணியில் உள்ள பெரிய நடிகர்கள் அது பற்றி அறிவிப்புகளை இதுவரை வெளியிடவில்லை. இருந்தாலும் விஜய், அஜித், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மட்டுமே 1 கோடிக்கும் மேல் கொரானோ நிவாரண நிதியை வழங்கியுள்ளார்கள். சில நடிகர்கள் மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்டவைகளை வழங்கி உள்ளார்கள். அந்த உதவிகளும் தேவைதான்.
இருந்தாலும், முன்னணி பெரிய நடிகர்கள் அவர்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் குறைத்துக் கொண்டால் அது தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இருக்கும். அப்படி ஒரு அறிவிப்பை முதலில் வெளியிடப் போகும் முன்னணி ஹீரோ யார் என்பதைப் பார்க்க திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.