Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2020 முடியும் வரை புதிய படங்களுக்கு சம்பளம் வேண்டாம் : அருள்தாஸ் அதிரடி

09 மே, 2020 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Actor-Aruldos-announced-no-salary-for-this-year-end

தற்போதைய ஊரடங்கு நிலையிலும் சரி, இந்த நிலை மாறி சுமூகமான சூழல் திரும்பினாலும் சரி சினிமா தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் ஏராளமாக இருகின்றன. அந்தவகையில் அவர்களுக்கு கைகொடுத்து உதவும் விதமாக தற்போது சில நட்சத்திரங்கள், இயக்குனர்கள் தாங்கள் பணியாற்றும் படங்களில் இருந்து தங்களது சம்பளத்தில் 25 சதவீதத்தை விட்டுக்கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நான் மகன் அல்ல, சூதுகவ்வும் உள்ளிட்ட பல படங்களில் நடித்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் அருள்தாஸ் வரும் 2020 டிசம்பர் மாதம் வரை தான் புதிதாக நடிக்கும் படங்களுக்கு சம்பளம் வேண்டாம் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது : “திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம் தான். முதல் படமான நான் மகான் அல்ல தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்கு காரணம்- எனது இயக்குனர்கள், உதவி இயக்குர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான்... வாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்..

தற்போது உலகம் முழுக்க கோவிட்-19 என்ற கொடிய வைரஸ் பரவலால் நமது திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் கேள்விக்குறியாக்கி விட்டது. நானும் என்னைச் சுற்றி இருக்கும் நம் திரைத்துறை நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

இலையுதிர் காலத்திற்கு பின் மரங்கள், துளிர்விட்டு பசுமையான வசந்தகாலத்திற்கு காத்திருப்பது போலவே நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வெப் சீரிஸி-ல் 'வட சென்னை 2' - வெற்றிமாறன் தகவல்வெப் சீரிஸி-ல் 'வட சென்னை 2' - ... சின்னஞ்சிறு கிளியே : சுஹாசினி இயக்கிய குறும்படம் சின்னஞ்சிறு கிளியே : சுஹாசினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

indiramohan - doha,கத்தார்
16 மே, 2020 - 08:31 Report Abuse
indiramohan 2021 முடியற வரை தமிழ் ராகேர்ஸ்ல தான் படம் பார்க்கணும் போல விஜய் அண்ணா ,அஜித் அண்ணா ,ரஜினி சார், கமல் சார் படம் லாம் நம்ம பட்ஜெட்க்கு தியேட்டர்ல பக்க முடியாது
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11 மே, 2020 - 04:08 Report Abuse
J.V. Iyer பெரிய நடிகர்கள் சொல்லவேண்டும், இதை செய்யவேண்டும்.. அவர்களால் தான் தயாரிப்பாளர்களுக்கு பெரும் செலவு. டிக்கெட் ஐந்து ரூபாய்க்கு விற்பீர்களா? விஜய் படங்களை இலவசமாக பார்க்க மக்கள் ஆசைப்படுகிறார்கள்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10 மே, 2020 - 20:13 Report Abuse
 Muruga Vel சினிமா இல்லாமல் மக்கள் வாழ முடியும் … இனி அனிமேஷன் அல்லது கார்ட்டூன் படம் தான் டிவியில பாக்க முடியும் ... டாம் அண்ட் ஜெரி ...சார்லி சாப்ளின் படம் தான் ..இல்லாட்டி MGR சிவாஜி படம் பாக்கலாம்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09 மே, 2020 - 20:09 Report Abuse
Ramesh R நல்ல மனதை பாராட்டுவோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in