Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஊரடங்கு முடிந்ததும் அக்சய் குமார் படத்தை இயக்கும் பிரியதர்ஷன்

08 மே, 2020 - 17:41 IST
எழுத்தின் அளவு:
Priyadarshan-again-directing-Akshay-Kumar

மலையாள திரையுலகில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பிரியதர்ஷன். தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்' என்கிற பிரம்மாண்ட வரலாற்று படத்தை இயக்கியுள்ளார். மார்ச் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது டிசம்பர் இறுதிக்கு தள்ளிப்போயுள்ளது.. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு பக்கம் இந்திக்கு சென்ற பிரியதர்ஷன் ஹங்கமா-2 என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார்.

பரேஷ் ராவல் ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் 2003ல் அவர் ஏற்கனவே இயக்கிய ஹங்கமா என்கிற படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இந்தநிலையில் தனது அடுத்த படத்தையும் இந்தியிலேயே இயக்குகிறார் பிரியதர்ஷன்.. கதாநாயகனாக அக்சய் குமார் நடிக்க இருக்கிறார்.. இந்த ஊரடங்கு கால சமயத்தில் இந்தப்படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை தயார் செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளார் பிரியதர்ஷன். ஏற்கனவே பூல் புலையா, கட்டா மிட்டா உள்ளிட்ட சில படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சாப்பிட விரும்புவேன்!''சாப்பிட விரும்புவேன்!' டிஜிட்டலுக்கு மாறும் கோன் பனைகா குரோர்பதி டிஜிட்டலுக்கு மாறும் கோன் பனைகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in