பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
சினிமாவில் நடிக்க வருதவற்கு முன்பு இயக்குனர் மணிரத்னத்திடம் 'ஆயுத எழுத்து' படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் நடிகர் கார்த்தி. அதன்பின் 'பருத்தி வீரன்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்திற்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னும் உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பமாகது என்று சொல்கிறார்கள்.
அதற்குள்ளாக ஒரு புதிய படத்தில் நடித்து முடிக்க கார்த்தி முடிவெடுத்துள்ளாராம். 'கொம்பன்' படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளாராம்.
'பொன்னியின் செல்வன்' படம் முடியும் வரை வேறு படத்தில் நடிக்க அப்பட நட்சத்திரங்களுக்கு அனுமதியில்லை என்று ஒப்பந்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஏதாவது காரணம் சொல்லி கார்த்தி நடிக்க முடிவெடுத்தாலும் மணிரத்னம் அதற்கு சம்மதிப்பாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.