Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்களைத் திறக்க அரசு முடிவு ?

08 மே, 2020 - 16:16 IST
எழுத்தின் அளவு:
TN-Theatres-may-be-opend-soon

கொரானோ ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பே தமிழ்நாட்டில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் தியேட்டர்களைத் திறக்க மேலும் சில மாதங்கள் ஆகும் என்று சொல்லப்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தியேட்டர்களை மே மாத கடைசி வாரத்திலோ அல்லது ஜுன் மாதம் முதல் வாரத்திலோ திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தியேட்டர் ஓனர்கள் உள்ள வாட்சப் குழுவில் பிரபல தியேட்டர் உரிமையாளரும், வினியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் அது பற்றி குரல் பதிவு வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

ஒரு பக்கம் ஜுன், ஜுலை மாதங்களில் கொரானோ உச்ச நிலையை அடையும் என சில மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. விரைவில் பேருந்துகள் இயங்க ஆரம்பிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இப்போது தியேட்டர்களும் திறக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. ஊரடங்கு இருக்கும் நேரத்திலும் காய்கறி கடைகள், கறி கடைகள், டாஸ்மாக் ஆகியவற்றிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அது போல ஊரடங்கு முடிந்தபின் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் மக்கள் வருவார்களா ?.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷுக்காக ஒன்றிணையும் பிரபலங்கள்தனுஷுக்காக ஒன்றிணையும் பிரபலங்கள் கார்த்தியின் திடீர் முடிவு ? மணிரத்னம் சம்மதிப்பாரா ? கார்த்தியின் திடீர் முடிவு ? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10 மே, 2020 - 04:46 Report Abuse
J.V. Iyer மக்கள் தொகையை கட்டுப்படுத்த எல்லோரையும் ஒன்றுகூடச் சொல்வதே சாலச்சிறந்தது. பலே
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09 மே, 2020 - 13:53 Report Abuse
தாமரை செல்வன்-பழநி பொதுவாகவே தமிழகத்தைப் பொறுத்த அளவில் டாஸ்மாக் சினிமா போராட்டம் இது இல்லாமலிருக்க முடியாது.
Rate this:
விக்கு மண்டையன் கொரோனவுல போகாத உயிர் மென்டல் வாத்தியான் படத்தை பாத்துட்டு போகட்டும்..
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
09 மே, 2020 - 09:54 Report Abuse
Venkatesh திறப்பது அரசின் முடிவாக இருந்தாலும் (காரணம் எதுவோ?) மக்கள் புறக்கணிக்க வேண்டும் ...திருப்பூர் சுப்ரமணியன்னு ஒரு திமிர் பிடித்த, பணம் கொழுத்த ...பேசியது பாருங்கள் ...இப்படி மனநிலை கொண்ட (நடிகர்களோ அல்லது யாராக இருந்தாலும் சரி) தகுந்த பாடம் புகட்ட வேண்டும் ...2 மணி நேரம் முடிய ஒரு அரங்கத்தில் உட்கார்ந்து இருப்பது எவ்வளவு ஆபத்தானது ...சினிமா ஒன்றும் அத்தியாவசியம் இல்லை பொழுது போக்கு தானே ... என்ன அவசரம்...
Rate this:
Balam - Chennai,இந்தியா
09 மே, 2020 - 09:04 Report Abuse
Balam As per government guidelines, shop will be closed if they operate with AC. Now how cinema complex can be operated without AC in a closed room?
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in