Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எந்த வெற்றியும் சாதாரணமாக கிடைத்து விடாது : ஆத்மிகா

07 மே, 2020 - 23:35 IST
எழுத்தின் அளவு:
Any-success-is-not-normally-achieved

மீசையை முறுக்கு படத்தில் நடித்த ஆத்மிகா உடன் ஒரு சந்திப்பு:


ஊரடங்கை எப்படி பயனுள்ளதாக மாற்றிக் கொண்டீர்கள்?


நிறைய புத்தகம் படித்தேன். நடிப்பு தொடர்பான விஷயங்களை அறிந்தேன். சமையல் மற்றும் நடனமும் கற்றுக் கொண்டேன். தினமும் உடற்பயிற்சியை மறக்காமல் செய்தேன்.




உங்களை அதிக படங்களில் பார்க்க முடியவில்லையே ஏன்?


நிறைய கதைகள் வந்தன. சம்பாதிக்க வேண்டும் என்றால், நிறைய படங்களில் நடிக்கலாம். பணமும் முக்கியம் தான். அதைவிட நல்ல பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனக்கு முக்கியம். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.




தற்போது நடித்துள்ள படங்கள்?


நரகாசூரன், காட்டேரி படங்களை முடித்துள்ளேன். இன்னும் மூன்று படங்களில் நடிக்க உள்ளேன்; கதையும் கேட்டு வருகிறேன்.


தமிழ் பேச தெரிந்த நடிகையர் கோவையில் இருந்து அதிகம் வருகின்றனர். ஆனால் வாய்ப்பு சரியாக கிடைப்பதில்லை என, எண்ணுகிறீர்களா?


சினிமாவில், கோவை பெண் என்பதை விட, தமிழ் பெண் என, அடையாளப்படுத்துவதே எனக்குப் பிடிக்கும். தமிழ் பேசுவதும் ஒரு தகுதியே. தமிழ் பேசுவதால் மட்டுமே வாய்ப்பு கேட்க முடியாது. நடிக்க வந்து விட்டால், அதற்கான அனைத்து தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.




உங்களுக்கு, ரோல்மாடல் யார்?


எனக்கு பெரிய உதாரணம் என்றால், அது ஜெயலலிதா தான். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சாதாரணமாக அதை பெறவில்லை. யாராக இருந்தாலும், கடும் உழைப்பை கொடுத்திருப்பர். யாரிடம் என்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதை கற்றுக் கொள்ள வேண்டும்.




யாருடன் நடிக்க ஆசை?


விஜய் உடன் நடிக்க வேண்டும். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும்.எந்த மாதிரி கதைக்களத்தில் நடிக்க விருப்பம்?நடிக்க சாவாலாக உள்ள பாத்திரங்களில் நடிக்க வேண்டும்.






போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்?


எனக்கு நான் தான் போட்டி. மற்ற யாரையும் போட்டியாக நினைத்தது இல்லை.




பிடித்த நடிகை?


நயன்தாரா. அவர் தற்போதுள்ள இந்த இடத்தை பிடிக்க பல ஆண்டுகள் ஆனது. அவருக்கு கிடைத்தது போன்ற கதைகள் வந்தால், நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.






அம்மா வேடத்தில் நடிப்பீர்களா?


நடிக்க வந்து விட்டால், அந்த பாத்திரத்தை மட்டுமே பார்க்க வேண்டும். பாலிவுட்டை எடுத்துக் கொண்டால், அம்மாவாக நடித்தவர்கள் நாயகியாகவும் நடிக்கின்றனர். நாம் பார்க்கிற பார்வையில் தான் புரிதல் இருக்கிறது. நம்மூரில் தான் அம்மா பாத்திரத்தில் நடித்தால், கேரியர் முடிந்து விடும் என, நினைக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காத்திருந்து... காத்திருந்து!காத்திருந்து... காத்திருந்து! இந்தியன் 2' வெளியாகும்! இந்தியன் 2' வெளியாகும்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

M.Sam - coimbatore,இந்தியா
09 மே, 2020 - 07:51 Report Abuse
M.Sam அதான் காட்ட வேண்டியதை காட்டி பெற வேண்டியதை பேரனும் அதன் பயன் நிகரில்லாதது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in