Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 படங்களில் 25 சதவீதம் சம்பளத்தை குறைத்த விஜய் ஆண்டனி

05 மே, 2020 - 16:13 IST
எழுத்தின் அளவு:
Vijay-Antony-reduced-3-films-salary

கொரோனா தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கும் இந்த ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தவகையில் மிகப்பெரிய தொகையை தங்களது படங்களில் முடக்கிவிட்டு எப்போது நிலைமை சரியாகும் என தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.. இதன் ஒருபகுதியாக முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது, தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள் மற்றும் காக்கி ஆகிய படங்களில் தனக்கான சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். தற்போதைய சூழல் மாறி இந்தப்படங்கள் ரிலீசுக்கு வரும் சமயத்தில் விஜய் ஆண்டனியின் சம்பள குறைப்பு அந்தப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

விஜய் ஆண்டனி நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறும்போது, “எங்களது கோரிக்கையை ஏற்று விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதற்கு நன்றி.. தான் ஒரு தயாரிப்பாளர்களின் நடிகர் என அவர் நிரூபித்துள்ளார். மற்ற நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இதேபோல தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெப் சீரிஸில் நடிப்பேன் ; லாவண்யா திரிபாதி திட்டவட்டம்வெப் சீரிஸில் நடிப்பேன் ; லாவண்யா ... டாஸ்மாக் திறப்பு - கமல் விமர்சனம் டாஸ்மாக் திறப்பு - கமல் விமர்சனம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in