Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொன்டாவுக்கு பலர் ஆதரவு

05 மே, 2020 - 13:49 IST
எழுத்தின் அளவு:
Telugu-celebrities-supports-Vijaydevarakonda

கொரானோ ஊரடங்கு சமயத்தில் பலரும் பலவிதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள். தெலுங்குத் திரையுலகின் இளம் நடிகரான விஜய் தேவரகொன்டா அவருடைய அறக்கட்டளை மூலம் 'மிடில் கிளாஸ் பண்ட்' என்ற திட்டத்தை ஆரம்பித்தார். அவருடைய அறக்கட்டளைக்கு நிதியுதவி அளிக்கவும் கேட்டுக் கொண்டார். பலரும் நிதியுதவி அளித்தனர்.

மேலும், கொரானோ ஊரடங்கில் உதவி தேவைப்படும் மக்களுக்கு அந்த அறக்கட்டளை மூலம் நிவாரண உதவிகளையும் வழங்கினார். இந்த விவகாரம் குறித்து தெலுங்குத் திரையுலகின் முன்னணி இணையதளம் ஒன்று விஜய் தேவரகொன்டாவை குறை சொல்லி செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதற்கு விளக்கமளிக்கும் வகையில் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். பொய்யான செய்திகளை வெளியிடுவது பற்றி கோபப்பட்டிருந்தார். விஜய்யின் கருத்துக்கு தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிரஞ்சீவி, ரவிதேஜா, மகேஷ் பாபு, அல்லரி நரேஷ், ராணா டகுபட்டி, நடிகை ராஷி கண்ணா, இயக்குனர்கள் பூரி ஜெகன்னாத், கொரட்டல சிவா, வம்சி பைடிப்பள்ளி, அனில் ரவிப்புடி, ஹரிஷ் சங்கர், கிரிஷ், சிவா நிர்வணா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'நிசப்தம்' - மீண்டும் ஓடிடி சர்ச்சை'நிசப்தம்' - மீண்டும் ஓடிடி சர்ச்சை பிளாஷ்பேக்: ரசிகர்கள் தேர்ந்தெடுத்த ஜோடி பிளாஷ்பேக்: ரசிகர்கள் தேர்ந்தெடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in