Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மருத்துவமனையில் இருந்த அஜித்திடம் கதை சொல்லி ஓகே செய்த ராஜீவ் மேனன்

04 மே, 2020 - 19:40 IST
எழுத்தின் அளவு:
Rajiv-Menon-shares-of-Kandukonden-Kandukonden-experience

ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். தாணு தயாரித்த இந்தப் படம் 2000ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியானது. நாளையுடன்(மே 5) இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.

இதையொட்டி ஆங்கில நாளிதல் ஒன்றிக்கு இயக்குனர் ராஜீவ் மேனன் அளித்துள்ள பேட்டியில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்குள் அஜித் வந்தது எப்படி என ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.

"அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பிரசாந்திடம் தான் கேட்டேன். ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிப்பது என்றால் ஓகே. தபுவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என அவர் மறுத்துவிட்டார்.

பிறகு அஜித்தை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என யோசித்தோம். ஆனால் அப்போது அஜித் ஒரு விபத்தில் சிக்கி கடுமையாக அடிப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் தான் அவரை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்துவிட்டதால் உடனடியாக சம்மதித்துவிட்டார்", என ராஜீவ் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மனிதர்கள் தான் உண்மையான வைரஸ் : அஸ்வின் வேதனைமனிதர்கள் தான் உண்மையான வைரஸ் : ... திருமண மண்டபம்: ரஜினி தரப்பு பதில் திருமண மண்டபம்: ரஜினி தரப்பு பதில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

shakti - vilupuram,இந்தியா
06 மே, 2020 - 21:23 Report Abuse
shakti Jane Austen's 1811 novel Sense and Sensibility கதையை காப்பி அடித்து படமெடுத்ததில் அப்படி என்ன பெரிய பெருமை கூந்தல் ???
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
06 மே, 2020 - 04:42 Report Abuse
jayanantham ராஜீவ் - அஜித் மேனன் ஒத்துப் போவதில் ஆச்சர்யமில்லை.
Rate this:
venkat -  ( Posted via: Dinamalar Android App )
05 மே, 2020 - 12:48 Report Abuse
venkat backbone of the movie is ar Rahman
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in