Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்றென்றும் த்ரிஷா - பிறந்தநாள் ஸ்பெஷல்

04 மே, 2020 - 19:15 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-Trisha

மவுனமாய் பேசி, விண்ணைத் தாண்டி வந்து, லேஸ் லேசா ரசிகர்களின் இதயங்களை தட்டி, என்றென்றும் ரசிகர்களின் மனசெல்லாம், புன்னகை மாறாமல் நிறைந்திருக்கும் நடிகை த்ரிஷாவுக்கு இன்று 37வது பிறந்தநாள். சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். வழக்கமாக தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்து கொண்டாடுவார் த்ரிஷா. ஆனால் இப்போது கொரோனா ஊரடங்கால் வெளியில் எங்கும் போக முடியாத சூழல். அதனால் வீட்டிற்குள்ளேயே தனது பிறந்தநாளை கேக் வெட்டி குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது அழகாலும், அறிவாலும் மிஸ்.மெட்ராஸ் பட்டம் வென்றும், மிஸ்.இந்தியா போட்டியில் புன்னகை அழகியானார் த்ரிஷா. இதனால் சினிமா உலகம் அவரை அள்ளி அணைத்துக் கொண்டது. 1999ம் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான ஜோடி திரைப்படத்தில், சிம்ரனின் தோழியாக த்ரிஷா நடித்தார். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக “மௌனம் பேசியதே” திரைப்படத்தில் நடித்தார். ஹீரோயினாக அவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவே. பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசாவில் ஷோலோ ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பின் கமர்ஷியல் படங்களாக நிறைய நடித்து தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார். ''விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும், கொடி, அரண்மணை, 96'' என நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஷால், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இவர் உடன் அறிமுகமான ஹீரோயின்கள் எல்லாம் இப்போது அக்கா, அண்ணி, அம்மா கேரக்டருக்கு வந்து விட்டார்கள். ஆனால் 17 ஆண்டுகளுக்கு மேலாக த்ரிஷா இப்போதும் ஹீரோயின் தான் தொடருகிறார். காரணம் அவர் மனதையும், உடலையும் எப்போதும் இளமையாக வைத்திருக்கிறார்.

கொஞ்சம் கால அவகாசம் கிடைத்தாலும் உலகின் ஏதோ ஒரு மூலைக்கு சென்று தன் அடையாளங்களை மறந்து சிறகடித்து பறந்து விட்டு திரும்புவார். கவலையின்றி மனதை லேசாக வைத்து கொள்ளும் வித்தை தெரிந்ததால் தான் இன்றும் இளமையுடன் அதே புன்னகை மாறாமல் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
80ஸ் ஹீரோயின்களுடன் செம ஆட்டம் போட்ட சிரஞ்சீவி: வைரலாகும் வீடியோ80ஸ் ஹீரோயின்களுடன் செம ஆட்டம் போட்ட ... சிம்புவை ஒதுக்கிவிட்டு கே.ஜி.எப் ஹீரோவுடன் கைகோர்க்கும் இயக்குனர் சிம்புவை ஒதுக்கிவிட்டு கே.ஜி.எப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06 மே, 2020 - 16:34 Report Abuse
skv srinivasankrishnaveni இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னே என்றும் மனநிம்மதியுடன் எவரையும் சார்ந்து நின்று ஏமாறாமல் இனிமையாகவே இருக்கணும் திருமணம் தேவைதான் ஆனால் இப்போது வயது ஏறிட்டுதே உன்னிடம் இருக்கும் சிலகோடிகளை சுரண்டவேதான் வருவானுக சோம்பேறிமடையர்கள் , நோ நோ வெட்டிங் ஹாப்பி அண்ட் என்ஜோய் யுவர் திஸ் LIFE
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in