Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அடுத்து ராமாயணத்தை இயக்குங்க' : ராஜமவுலிக்கு ரசிகர்கள் கோரிக்கை

03 மே, 2020 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Fans-demand-Rajamouli-to-direct-Ramayanam

பிரமாண்ட பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக ராமாயணத்தை திரைப்படமாக இயக்க வேண்டுமென ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு தூர்தஷனில் மீண்டும் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏப்.16ம் தேதி, 7.7 கோடி பார்வையாளர்களுடன் உலகளவில் அதிகம் பேர் பார்த்த தொலைக்காட்சி தொடர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. உத்தர் ராமாயண் தொடரின் கடைசி எபிசோட் நேற்று (மே 2) ஒளிப்பரப்பானது . இதனையடுத்து ராமாயண தொடரின் ரசிகர்கள், பாகுபலி பட புகழ் இயக்குனர் ராஜமவுலி, புராண இதிகாசமான ராமாயணத்தை வெள்ளித்திரைக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பல திரைப்பட இயக்குனர்கள் ராமாயண கதையை படமாக இயக்கியுள்ளனர். எனினும் ராஜமவுலி, பாகுபலி படத்தில் கதாபாத்திரங்களை பிரமாண்டமாக வடிவமைத்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர். பிரமாண்ட படம் என்பதோடு மொழி, நாடுகளை கடந்து வசூலிலும் பாகுபலி முந்தைய பிளாக் பஸ்டர் சாதனைகளை முறியடித்தது.

சமூகவலைதளமான டுவிட்டரில் ரசிகர் ஒருவர், 'ராமாயணம் மறு ஒளிபரப்பு அனைத்து தொலைக்காட்சி சாதனைகளையும் முறியடித்தது. ராமாயணத்தின் ரீமேக் உறுதியாக சினிமா உலகின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் . ராஜமவுலி நம்மிடம் இருக்கும் போது, அதை யாராலும் தடுக்க முடியாது' என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர், '21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய திரைப்படமாக இருக்கும். தற்போதைய தலைமுறையினருக்கு அதன் அனைத்து மகிமையையும் மறுபடியும் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அவரை விட வேறு யாரால் சொல்ல முடியும்' என பல ரசிகர்களும் சமூகவலைதளங்கள் மூலம் தங்களது விருப்பத்தை கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹேராமும்... அவமானமும்... : கமலின் மனவருத்தம்ஹேராமும்... அவமானமும்... : கமலின் ... நச்சம்மாவின் புது அவதாரம் - யு-டியூப் சேனல் துவங்கினார் நச்சம்மாவின் புது அவதாரம் - யு-டியூப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sivak - Chennai,இந்தியா
04 மே, 2020 - 09:31 Report Abuse
Sivak பாஹுபலி போன்ற ப்ரஹ்மாண்ட படங்களை இயக்கிய இவர் ராமாயணத்தை சிறப்பாக எடுத்து காட்டுவார் என்று நம்புகிறேன்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04 மே, 2020 - 08:10 Report Abuse
Natarajan Ramanathan கண்டிப்பாக ராஜமௌலி ராமாயணத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்க வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in