பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
மலையாளப் படமான 'பிரேமம்' படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தமிழ் நடிகையான சாய் பல்லவி. தெலுங்கில் அறிமுகமான பின்தான் தமிழுக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தமிழில் நடித்த 'கரு, மாரி 2, என்ஜிகே' ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை. அதனால், தமிழில் தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருக்கிறார் சாய்பல்லவி.
இருந்தாலும் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளன. 'பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பதி பதி லேச்ச மனசு' ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா ஜோடியாக 'லவ் ஸ்டோரி' படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இன்னும் இறுதிக்கட்டப் பணிகள், சில நாள் படப்பிடிப்பு இப்படத்திற்காக நடைபெற வேண்டி உள்ளது. இருந்தாலும் அதற்குள் படத்தைப் பார்க்கும் தன் ஆவலை இயக்குனரிடம் வெளிப்படுத்தி உள்ளார் நாக சைதன்யாவின் மனைவி சமந்தா. இயக்குனரும் எடுத்தவரையில் எடிட் செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு காட்டியிருக்கிறார்.
அதைப் பார்த்த சமந்தா, 'படத்தில் நாக சைதன்யாவை விட சாய் பல்லவி தான் டாமினேட் செய்கிறார்,' என்று இயக்குனரிடம் சொல்லியிருக்கிறாராம். அதைப் பெருமையாக சொன்னாரா இல்லை குறையாகச் சொன்னாரா என இயக்குனர் சேகர் கம்முலா குழம்பிவிட்டாராம். தெலுங்கில் தான் நடிக்கும் படங்களில் உடன் நடிப்பவரை ஓவர் டேக் செய்வதில் வல்லவர் சாய் பல்லவி