கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
ரஜினி, அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான படம் 2.0. இது எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. இதில் ரஜினி விஞ்ஞானி வசீகரன், ரோபா சிட்டி என இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். அக்ஷய்குமார் பக்ஷிராஜன் என்கிற பறவை ஆர்வலராக நடித்திருந்தார். பிற்பகுதியில் அவர் வில்லனாக மாறுவார்.
அவர் வில்லனாக மாறும்போது பறவையின் தோற்றத்தை கொண்டிருப்பார். இந்த கேரக்டரும், தோற்றமும் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது காமெடி நடிகர் சதீஷ், இதேப்போன்று தனது கேரக்டரை மாற்றி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் பக்ஷிராஜன் தோற்றத்தில் கேரவனில் இருந்து இறங்கும் அவர், "யப்பா வில்லன் நடிகர்களே.. கெட்டப் கிட்டப் போடுறது கொஞ்சம் லிமிட்டா போடுங்கபா.. ஏன்னா தமிழ் படம் 3 எடுக்குறாங்களாம். அதுக்குள்ள நெறய கெட்டப் மாத்தி என்னை இப்படி பண்ணாதீங்க. சிம்பிளா ஒரு மறு ஏதாவது வெச்சு நடிங்க" என பேசி உள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ரஜினி ரசிகர்கள் சதீஷை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.