யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
நடிகர் கமல்ஹாசனின் பேச்சோ அல்லது சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துக்களோ பலருக்கும் புரியவில்லை என்ற குறை பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது. நேற்று(மே 1) ஊரடங்கு தொடர்பாக அவர் பதிவிட்ட டுவீட் பலருக்கும் புரியவில்லை என்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே நடிகர் கமல் சில விளக்கங்கள் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலையில் பேசினார் கமல். இவரை நடிகர் விஜய் சேதுபதி கேள்வி கேட்டார். பல கேள்விகளுக்கு தனது பாணியில் விளக்கம் கொடுத்தார். அதில் ஒரு கேள்வியாக விஜய் சேதுபதி, உங்களின் பேச்சு இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்கலாமே, இதை வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன் என்றார்.
அதற்கு கமல், ஔவையார், பாரதியார், பாரதிதாசன் போன்ற பலரும் புரியணும் புரியணும் என பதறிக் கொண்டிருந்தார்கள் என்றால் வெறும் சினிமா பாடல் மட்டுமே எழுதியிருப்பார்கள். பாரதியாரிடம் காற்று வெளியிடை கண்ணம்மா பாடலுக்கு அர்த்தம் கேட்டிருந்தால் பாரதியே கிடையாது. டர்பன் கழண்டுவிட்டது என்று அர்த்தம். நான் இப்படித்தான். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள், உங்களுக்குப் புரிந்தது என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார்.