Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 பேர் பாடிய கொரோனா பாடல்: 14 மொழிகளில் வெளியிடும் லதா மங்கேஷ்கர்

02 மே, 2020 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Lata-mangeskar-to-release-corona-song-in-14-languages

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அது இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கொரோனா வைரசை எதிர்த்து போராடும் டாக்டர்களும், சுதாதார பணியாளர்களும் தங்கள் உயிரை தியாகம் செய்து வருகிறார்கள். அவர்களை பாராட்டியும், உற்சாகபடுத்தியும், அவர்கள் தியாகத்துக்கு மரியாதை செய்தும், 100 பாடகர்கள் இணைந்து ஒரு பாடலை பாடி உள்ளனர்.

100 பேரில் ஆஷா போஸ்லே, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், அனுப் ஜலோட்டா, அல்கா யாக்னிக், , கைலாஷ் கெர், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் சான, மகாலட்சுமி அய்யர், மனோ, பங்கஜ் உதாஸ், ஷான், சோனு நிகம், தலாத் அஜிஸ், உதித் நாராயணன், ஜஸ்பிர் ஜாசி ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதுகுறித்து பாடகி ஆஷா போஸ்லே கூறியதாவது: பொதுமக்களின் உணர்வுகளை எப்போதும் வெளிப்படுத்துகிறவர்கள் தான் பாடகர்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாம் அனைவரும் ஒரே தேசமாக ஒன்றுபட்டு போரிடுகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் 100 பேர் இந்திய பாடகர்கள் சங்கத்தின் சார்பில் நாட்டின் மீதான எங்கள் அன்பை வெளிப்டுத்துவதற்காக, ஒரே குரலாக இந்த பாடலை அர்ப்பணிக்கிறோம் என்றார்.

இந்த பாடலை நாளை இந்தியாவின் முதன்மை பாடகி லதா மங்கேஷ்கர் வெளியிடுகிறார். இந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானம் பிரதமர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய பாடகர்கள் உரிமை சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மனதை நெகிழ வைக்கும் ரிஷிகபூரின் கடைசி நிமிடங்கள்: லீக் ஆன வீடியோக்கள்மனதை நெகிழ வைக்கும் ரிஷிகபூரின் ... ஏ.ஆர்.ரஹ்மானின் கொரோனா பாடல்: ஷேர் செய்தால் 500 ரூபாய் பிரதமர் நிதிக்கு போகும் ஏ.ஆர்.ரஹ்மானின் கொரோனா பாடல்: ஷேர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

S.Ganesan - Hosur,இந்தியா
08 மே, 2020 - 19:37 Report Abuse
S.Ganesan கையை தட்டினால் கொரோனா போகுமா ? விளக்கு வெளிச்சம் காட்டினால் கொரோனா போகுமா என்றெல்லாம் கேட்ட அறிவு ஜீவிகள் , கழக உ.பி க்கள் , இப்போது சினிமாக்காரர்கள் பாடினால் போய்விடுமா என்று கேட்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் தயவு எலெக்க்ஷன் போது வேண்டுமே. அவர்கள் வந்து மைக் பிடித்து பேசினால் வோட்டு விழுமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in