'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
இந்த ஆண்டின் துவக்கதில் இருந்தே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கி மார்ச், ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் பாதிப்பு ஒரு வருடம் வரை இருக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் திரைக்கலைஞர்கள் ஒன்றாக இணையும் சர்வதேச பட விழாக்கள் தள்ளிவைக்கப்படும் சூழ்நிலையும், ரத்து செய்யும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற உலகப் படவிழாக்களில் ஒன்றான 'விசன்ஸ் து ரீல்' திரைப்படவிழாவை இணையதளத்தில் நடத்துகிறார்கள். கடந்த 49 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெற்று வரும் இப்படவிழாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச ஆவணப்பட பார்வையாளர்களும் படைப்பாளிகளும் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றனர்.
இப்படவிழாவில் 1000க்கும் அதிகமான படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150 புதிய ஆவணப்படங்களை பார்வையாளர்கள் இணையதளத்தில் பார்க்கலாம். அதன் பிறகு பார்வையாளர்கள் தரும் மதிப்பெண்கள், நடுவர்குழு தரும் மதிப்பெண்கள் அடிப்படையில் விருதுக்கு படங்கள் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு விருது விழாவும், சர்வதேச இயக்குனர்களின் சிறப்புரையும் சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.