முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் |
தமிழ் சினிமா உலகம் பல்வேறு விதமான பிரச்சினைகளை பல ஆண்டுகளாகவே எதிர்கொண்டு வருகிறது. அவற்றில் மிக முக்கியமான பிரச்சினை தியேட்டர்கள். தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகம், சுகாதாரமின்மை, பார்க்கிங் கட்டணம் மிக அதிகம், பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களின் விலை அதிகம் என படம் பார்க்க வரும் பொதுமக்கள் பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். ஆனால், அரசு அது குறித்து இதுவரை எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெளியில் 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்கப்படும் பாப்கார்ன்கள் தியேட்டர்களில் 100 ரூபாய் 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. தண்ணீர் பாட்டில் வெளியில் 25 ரூபாய் என்றால் தியேட்டர்களில் 50 ரூபாய். இப்படி எல்லாமே விலை மிக அதிகம். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பைக்கை நிறுத்த சினிமா பார்க்கும் டிக்கெட் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இப்படியெல்லாம் இருந்தால் மக்கள் எப்படி தியேட்டர் பக்கம் வருவார்கள் என யாரும் யோசித்ததே கிடையாது.
பெரிய ஹீரோக்களின் படமோ, நல்ல படமோ வந்தால் தியேட்டர்காரர்களுக்குக் கொண்டாட்டம்தான். டிக்கெட் கட்டணம் மூலம் வசூலாகும் தொகை அவர்களுக்கு ஒரு பக்கம் லாபம் என்றாலும் கேண்டீன் மூலம் அதிக விலைக்கு விற்கப்படும் தின்பண்டங்கள் மூலம் கொள்ளை லாபம் வரும். அதாவது, படத்தின் மூலம் ஆகும் வசூலை விட, கேண்டீன் மூலம் ஆகும் வசூல் அதிகம் இருக்கும். ஒரு வெற்றிகரமான படத்தைத் திரையிட்டால் தியேட்டர்காரர்களுக்கு இருவிதமான லாபம்.
ஆனால், இப்படியெல்லாம் பாப்கார்ன் விற்கிறோம் என்பதைப் பேச தயாரிப்பாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என முன்னணி வினியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் பேசிய பேச்சு கடந்த சில தினங்களாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும், அவர் பேசிய சில கருத்துக்களுக்கும் பல தயாரிப்பாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி இருக்கிறார்கள்.
ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதற்குள் தியேட்டர்களை ஒரு ஒழுங்கு நடவடிக்கைக்குள் கொண்டு வர வேண்டுமென பல தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.