Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாகர்கோவில் காசி பற்றி சின்மயி பகீர் தகவல்

30 ஏப், 2020 - 15:58 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-about-Nagercovil-Kasi

நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவர், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பணம், நகை பறித்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த காசி குறித்து முன்பே தான் எச்சரித்ததாக டுவிட்டரில் பதிவிட்ட சின்மயி, அவனை பற்றிய பகீர் தகவலையும் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதில், பொள்ளாச்சி சம்பவம் போன்று நாகர்கோவிலில் ஒருவன் சிக்கியதாக தகவல் வந்தது. போலீசார் அவனை கைது செய்தனர். சுஜி டெமோ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், டிக்டாக், பேஸ்புக்கில் இவன் கணக்கு வைத்துள்ளான்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியே வந்தபோது அதில் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் அசிங்கப்படுத்தி இவன் ஒரு வீடியோ போட்டிருந்தான். அந்த வீடியோவை நான் விமர்சித்து பதிவு போட்டிருந்தேன். அதற்கு சுஜி டெமோ என்னையும் திட்டி அசிங்கமாக பதிவு போட்டிருந்தான். "ஸ்கூல் பிள்ளைகளை கூட நான் பலாத்காரம் பண்ணியுள்ளேன், எனக்கு போலீசை தெரியும், லாயரை தெரியும், என் மீது யாரும் கை வைக்க முடியாது" என்று எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான்.

அப்போது அதனை ரிப்போர்ட் செய்து நான் இன்ஸ்டாகிராமில் அவனை பிளாக் செய்திருந்தேன். தயவு செய்து யாராவது ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும் என்று அப்போது கெஞ்சினேன், போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட வருகிறேன் என்றும் கூறியிருந்தேன்.
ஆனால் தங்கள் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கும் என்று பலரும் பயந்துவிட்டனர். சுஜி மேல் இப்போது கேஸ் போட்டவர்களை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி படத்துக்காக உதயநிதி படத்தை உதறிய காஜல் அகர்வால் ?சிரஞ்சீவி படத்துக்காக உதயநிதி ... இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கேவுக்கு இன்று 150வது பிறந்தநாள் இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (32)

venkat Iyer - nagai,இந்தியா
04 மே, 2020 - 08:16 Report Abuse
venkat Iyer சின்மயி துணிந்து பேசக்கூடியவர் .இதனால் திரைத்துறையில் உள்ள பல ஆண்களுக்கு இவரை வைத்தால் பலரது பெயர் வெளிவரக் கூடும் என்பதால் ஒட்டு மொத்தமாக அவரை வைக்க கூடாது என்ற முடிவில் உறுப்பினர் பதவியையே எடுத்துவிட்டார்கள்.எனது சினிமா துறை நண்பர் பார்ட்டி மற்றும் செக்ஸ் போன்றவை இத்துறையில் சர்வசாதாரணம்.இதை பிரச்சனையாக கொண்டு செல்பவர்கள் இத்துறைக்கு அடிப்படை உறுப்பினராக இருக்க லாயக்கற்ற வர்கள் என்று கூறுகிறார்
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
03 மே, 2020 - 14:58 Report Abuse
Nallavan Nallavan அவனைக் குறை சொல்லாமே இந்தம்மாவைத் திட்டியிருக்குற பயலுவ ...... ஏன்னா ஊரு அப்படி ......
Rate this:
periasamy - Doha,கத்தார்
03 மே, 2020 - 00:50 Report Abuse
periasamy பாம்பின் கால் பாம்பறியும்
Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
02 மே, 2020 - 17:54 Report Abuse
தமிழர்நீதி சின்னமாய் பலரால் சிதறி போயிருக்கார் . இவரின் குரலை யாரவது கேட்டு அவரை மீண்டும் ஒட்டவைக்க முன்வரவேண்டும் . இந்தியாவில் கற்பழிப்போர் அனைவரின் முகவரியும் சின்மயிடம் இருக்கலாம் . காவல்துறை இவரை தனியாக விசாரித்தால் பல விஷயம் கிடைக்கும் .
Rate this:
G.Prabakaran - Chennai,இந்தியா
02 மே, 2020 - 16:27 Report Abuse
G.Prabakaran இவனும் ஒரு சங்கியாமே தான் பிஜேபி யை சேர்ந்தவன் என முக நூலில் அறிவித்தவன் ஆகவே பொள்ளாச்சி சம்பவம் எப்படி மறக்கடிக்கப்பட்டதோ அதேபோல் இவன் விஷயமும் கமுக்கமாக அமுக்கப்படும்.
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in