Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்லைனில் வெளியாகும் 12 படங்கள்

29 ஏப், 2020 - 18:45 IST
எழுத்தின் அளவு:
12-movie-to-be-release-in-OTT.?

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், உடனடியாக தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படுமா என்பது சந்தேகமே. இதனால் பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ், ஜீ5 உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை வாங்கி தங்கள் பிளாட்பார்ம்பில் வெளியிட முன்வந்துள்ளன. இது தங்களுக்கு நல்ல லாபத்தை தருவதால், தயாரிப்பாளர்களும் அவர்களுக்கு படத்தை விற்க முன்வந்துள்ளனர்.

அப்படி தான் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய சூர்யா முடிவு செய்தார். ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யா படத்தை தங்கள் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என அறிவித்தனர். தியேட்டர் உரிமையாளர்களின் இந்த முடிவுக்கு எதிராகவும், சூர்யாவுக்கு ஆதரவாகவும் தயாரிப்பாளர்கள் பலர் ஒன்றிணைந்தனர்.

இந்த சூழலில் மொத்தம் 12 தமிழ் படங்கள் நேரடியாக ஆன்லைனில் வெளியாக உள்ளன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து, திரிஷா நடித்துள்ள பரம பதம் விளையாட்டு மற்றும் கர்ஜனை ஆகிய படங்கள் ஓடிடிவில் வெளியாக உள்ளன.

அதேபோல் சித்தார்த்தின் டக்கர், யோகி பாபு நடித்துள்ள காக்டெயில் ஆகிய படங்களும் ஆன்லைனில் நேரடியாக ரிலீசாக உள்ளது. வைபவ் நடித்துள்ள ஆர்.கே.நகர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகிவிட்டது.

ரிலீஸ் பிரச்சினையில் சிக்கித்தவித்த சந்தானத்தின் சர்வர் சுந்தரம், அமலா பால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, இந்த நிலை மாறும், பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட 12 படங்கள் இணையதளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுறாங்க: மீரா மிதுன் புகார்விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுறாங்க: ... டிடிக்கு கால் முறிவு டிடிக்கு கால் முறிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in