Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுறாங்க: மீரா மிதுன் புகார்

29 ஏப், 2020 - 18:34 IST
எழுத்தின் அளவு:
I-am-threaten-by-Ministers-supporters-says-Meeramithun

எதையாவது பேசி எப்போதும் தன்னை ஊடக வெளிச்சத்திலேயே வைத்திருப்பதில் விவரமானவர் மீரா மிதுன். தன்னைப் பற்றிய சர்ச்சைகள் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அதையே வேலையாகச் செய்து வருகிறார். பேசுவதற்கு ஒன்றும் இல்லையென்றால் கவர்ச்சி வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவது அவரது ஸ்டைல்.

இந்நிலையில் தமிழக பொருளாதார நிலை குறித்தும், தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் டுவீட்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்களில், “தமிழகம் பாதுகாப்பானதாகவே உள்ளது. முதல்வர் பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் தவறான தகவல்களை அளித்து ஊரடங்கு நிலையை பிறப்பித்து மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளனர். பொருளாதாரம் சீரற்ற நிலையில் இருப்பதே, இந்த ஊரடங்கின் பின்னணியாக உள்ளது. மக்களை அவர்கள் முட்டாளாக்க பார்க்கின்றனர்.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்தி பதுக்கி வைத்துள்ள பல்லாயிரம் கோடி அளவிலான பணத்தை கைப்பற்றி, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 1 லட்சம் வழங்கி அவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த டுவீட்களில் முதல்வர் பழனிசாமியையும், அமைச்சர் விஜயபாஸ்கரையும் அவர் டேக் பண்ணியுள்ளார்.

இது தொடர்பாக பல டுவீட்களை வெளியிட்டுள்ள மீரா, அதில் ஒன்றில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆட்கள் தன்னை மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், 'நான் உண்மையே சொல்கிறேன். இந்த டுவிட்டர் பதிவுகளை நான் பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளேன். எனக்கு எவ்வித பயமுமில்லை. பிரதமர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
ஐபோனில் உருவான குறும்படத்தில் ஆண்ட்ரியாஐபோனில் உருவான குறும்படத்தில் ... ஆன்லைனில் வெளியாகும் 12 படங்கள் ஆன்லைனில் வெளியாகும் 12 படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

Ram - ottawa,கனடா
05 மே, 2020 - 07:19 Report Abuse
Ram She has said the truth, only thing she forgot to include opposition part leaders
Rate this:
NATARAJAN - Coimbatore,இந்தியா
03 மே, 2020 - 09:08 Report Abuse
NATARAJAN யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் சாக்கடை அரசியல் வாதிகளின் பொம்மை.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
02 மே, 2020 - 09:25 Report Abuse
Ellamman எவ்வளவோ கேவலங்களை செய்துள்ள இந்த பெண்மணி ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளார்...பாவ மன்னிப்பு?? இல்லை பாபவிமோசனம்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
02 மே, 2020 - 03:57 Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் போல பொழுது போக்கு 'அரசியல் செய்கிறார் ,ஏம்மா சன் தயாரிப்பில் சான்ஸ் ஏதும் கிடைக்கப்போவுதா?
Rate this:
Tamilan - madurai,இந்தியா
01 மே, 2020 - 20:15 Report Abuse
Tamilan மீரா மிதுன் சினிமா படத்தை டவுன் லோட் செஞ்சு பாருங்க. வெட்டி செலவு பண்ணாதீங்க மக்கா.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in