Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயநிர்மலா சுயசரிதை உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை ; மகன் விளக்கம்

29 ஏப், 2020 - 16:47 IST
எழுத்தின் அளவு:
We-did-not-give-my-moms-biopic-to-anyone-says-Actress-Vijaya-Nirmala-son

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக 250 படங்களுக்கும் மேல் நடித்தவர் நடிகை விஜயநிர்மலா. மேலும் 42 படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர் என்கிற கின்னஸ் சாதனைக்கும் சொந்தக்காரர். கடந்த வருடம் ஜூன் மாதம் இவர் காலமானார். இந்நிலையில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநடி என்கிற பெயரில் திரைப்படமாக வெளியானது போல விஜயநிர்மலாவின் வாழ்கை வரலாறும் திரைப்படமாக உள்ளது என்று சில தினங்களுக்கு முன் ஒரு செய்தி வெளியானது. இதிலும் விஜயநிர்மலா கதாபாத்திரத்தை கீர்த்தி சுரேஷ் தான் ஏற்று நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்தநிலையில் விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் உரிமையை நாங்கள் யாருக்கும் தரவில்லை என அவரது மகன் நரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “என் அம்மா உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே அவரது சுயசரிதையை படமாக்க வேண்டும் என அதை ஒரு ஸ்க்ரிப்ட் ஆக உருவாக்க சொன்னார். அவரின் ஆலோசனையுடன் நான் அதை மேற்கொண்டு வந்தேன்.. ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டதை அடுத்து என்னால் முன்பை போல அந்த ஸ்க்ரிப்ட்டை உருவாக்குவதில் வேகம் காட்ட முடியவில்லை. அதேசமயம் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உரிமையை யாருக்கும் நாங்கள் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்..

அப்படியானால் நீங்களே அந்தப்படத்தை இயக்க போகிறீர்களா என்று அவரிடம் கேட்டால், “இந்த ஸ்க்ரிப்ட்டை எழுதி முடிக்க இன்னும் ஒரு வருட காலம் ஆகும்.. இப்போதே அதுபற்றி என்னால் கூற இயலாது” என்று பதில் அளித்துள்ளார் நரேஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேரள தலைவர்களை இழிவு செய்யட்டுமா : இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்கேரள தலைவர்களை இழிவு செய்யட்டுமா : ... தள்ளிப்போகும் பிக்பாஸ்? தள்ளிப்போகும் பிக்பாஸ்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in