Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரள தலைவர்களை இழிவு செய்யட்டுமா : இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

29 ஏப், 2020 - 14:40 IST
எழுத்தின் அளவு:
Director-SR-Prabhakars-angry-satement

இரண்டு மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான வரனே ஆவிஷ்யமுண்டு என்கிற படம் இப்போது பெரும் பரபரப்பை கிளப்பி படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மானை மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது. இந்தப்படத்தில் நடித்துள்ள நடிகர் சுரேஷ்கோபி தான் வளர்க்கும் நாயை பிரபாகரா என பெயரிட்டு அழைப்பார். இது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமானப்படுத்தும் செயல் என தமிழ் ஆர்வலர்கள், துல்கர் சல்மானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் மன்னிப்பு கோரும் விதமாக விளக்கம் அளித்தாலும் பலர் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்தநிலையில் தனது பெயரையே பிரபாகரன் என வைத்துள்ள சுந்தர பாண்டியன் பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், துல்கர் சல்மானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இனி நாங்களும் இதேபோல கேரள தலைவர்களை இழிவுபடுத்தட்டுமா என ஆவேசமாக கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது : வரனே ஆவிஷ்யமுண்டு எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு "பிரபாகரன்" என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது.

அதென்ன கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று. உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும் தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்..! "பிரபாகரன்" என்பது உங்களுக்கு ஒரு சாதாரண பெயர். எங்களுக்கு அதுவே உயிர்., இதை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது.

இனியும் நீங்கள் தமிழர்களையும், தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாகவும், எழுதுவதாகவும் இருந்தால்- நாங்களும் "கேரளத்து காந்தி" என்றழைக்கப்பட்ட கே.கேளப்பன் பெயரையும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட "மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்" பின் பெயரையும் "வக்கம் மௌலாவி" யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கு பெயராக சூட்ட வேண்டிய சூழல் ஏற்படும்..

யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக் கொள்கிறேன். நடிகர் பிரசன்னா, சக நடிகர் என்கிற முறையில் துல்கருக்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு, "தலைவர்" பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்..” என இவ்வாறு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
இர்பான் மறைவு சினிமா உலகுக்கே இழப்பு - திரைப்பிரபலங்கள் இரங்கல்இர்பான் மறைவு சினிமா உலகுக்கே ... விஜயநிர்மலா சுயசரிதை உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை ; மகன் விளக்கம் விஜயநிர்மலா சுயசரிதை உரிமையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

PR Makudeswaran - Madras,இந்தியா
02 மே, 2020 - 11:04 Report Abuse
PR Makudeswaran இது ஒரு அர்த்தமில்லாத கருத்து. தேவையற்ற பிரச்சினை வளர்ப்பு
Rate this:
Sundar - Chennai,இந்தியா
02 மே, 2020 - 09:21 Report Abuse
Sundar ini sr prabakaran
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
02 மே, 2020 - 05:50 Report Abuse
Vaduvooraan இந்த இயக்குநரின் இனமானம் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது. ஆனால் "யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன்" என்பதுதான் இதில் உறுத்துகிறது. பொதுவாக கைவசம் படம் இல்லாத இயக்குநர்கள்தான் இந்த மாதிரி அறிக்கை விட்டு தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்ள முயல்வார்கள் என்பது ஒரு பக்கம்...ஆனால் இவருக்கு வாய்ப்பு கொடுக்கவும் யாராவது தயாராக இருந்தால்தானே? அத்தைக்கு மீசை முளைக்கிற கதைதான் எல்லாம் வேலையில்லா திண்டாட்டம் பண்ற வேலைதான்
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
01 மே, 2020 - 19:46 Report Abuse
கல்யாணராமன் சு. முதலாவதாக பிரபாகரன் "தமிழினத்தலைவர்" இல்லை ...... அவர் "இலங்கை தமிழர்களின் ஒரு தலைவர்" .... அவ்வளவுதான்..... இப்படி கொதிச்சு போயிருக்கறவங்க, ஆண்டவன் கட்டளை படத்திலே சிவாஜி கணேசனோட நாய் பேரு "மணி" ன்னு இருந்ததையோ, அன்பே சிவம் படத்திலே கமலஹாசனோட நாய் பேரு "சங்கரன்" ன்னு இருந்ததையோ, கடவுள் பெயரை வெச்சுருக்காங்க அப்படின்னு ஏன் கண்டிக்கவில்லை?..... நெறைய படத்திலே Jimmy, Johnny, Tommy அப்படின்னெல்லாம் பேர் வெச்சிருக்காங்க ....... அதுக்காக James Bondஐ அவமதிச்சுட்டாங்க, ஏசுவின் சீடரை அவமதிச்சுட்டாங்க, Tom Hanks ஐ அவமதிச்சுட்டாங்கன்னு போராட்டமா நடத்தமுடியும்? இப்படியே இழுத்துட்டு போனா, வில்லன்களுக்கெல்லாம் பேரே வெக்காம நம்பர் (1, 2, 3) இல்லேன்னா வெறும் எழுத்து (A, B, C, ஐ, ஆ, எ) வெச்சுதான் கூப்பிடணும் .. .......
Rate this:
V. Ashok Kumar - Turku,பின்லாந்து
01 மே, 2020 - 16:15 Report Abuse
V. Ashok Kumar Many of you posted here just targeting our own people instead of What Dulkar salman tweeted at first about the name, removed it (why he did so, if he was right on his part?) then justified with possible statement. That is, if it hurts anyone, I pose my apologies otherwise, leave it- this is what his statements in English directly conveying to all. Please read again and again before supporting him. Second, Yes, I agree that this matter should have been ignored or left with assumption Dulkar explained with his clever apology statement. How many of you here watched malayalam movies especially connected with villages near by kerala and Tamil Nadu border? Please watch those to see how TN people are always portrayed in those movies? I personally watched and observed a lot. Example: What Jayaram told in one his movies about Tamil women although his native language is Tamil? Ok. Let see other side of the coin? Yes malyali people are also portrayed in a shameful way in Tamil movies as well. I am totally against it too. It does not mean that we can leave as mutual give and share. How malaylis are calling or reporting about Tamil people in their daily life and events? "Pandi" Well many of you here might 'have thought like “They refer us as Pandiya king category”. NO not all, according to Malayalis “Pandi” means A person who is dark, not clean, filthy, thief, and from Tamil Nadu”. I collected all these details from my good malalai fris who worked with me. If you have really good Malayali fris, please ask the meaning it and I hope they will be honest in their response. Are we referring “Mallu” as with similar or hateful words as implications? No. SO, No one is above or low to anyone. Why do we have to be so gentle? It should be stopped from both state movies in future.
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in