Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இர்பான் மறைவு சினிமா உலகுக்கே இழப்பு - திரைப்பிரபலங்கள் இரங்கல்

29 ஏப், 2020 - 14:28 IST
எழுத்தின் அளவு:
Cinema-celebrities-condolence-to-Irrfan-khan-dead

பாலிவுட் நடிகர் இர்பான் கானின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்
இவ்வளவு சீக்கிரம் நீங்கள் போக வேண்டுமா இர்பான் ஜி. உங்கள் நடிப்பு என்னை எப்போதும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. எனக்கு தெரிந்த சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நீண்டகாலம் வாழ விரும்பினேன். அதற்கு நீங்கள் தகுதியானவரும் கூட. உங்கள் குடும்பத்தார் தைரியமாக இருக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா
உங்களின் தூய கவர்ச்சி மந்திரம் தான் நீங்கள் செய்த எல்லாமும். உங்களின் திறமை பல வழிகளில் பலருக்கு வழிவகுத்தது. நீங்கள் எங்களில் பலருக்கு உத்வேகம் அளித்தீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என டுவிட்டரில் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

அஜய் தேவ்கன்
இர்பானின் அகால மரணம் பற்றி கேட்டதும் மனம் உடைந்தது. இந்திய சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மனைவி, மகன்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.

சோனம் கபூர்
கடைசி வரை நம்பிக்கை உடன் இருந்தேன். உங்களின் ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

சபானா ஆஷ்மி
இன்று காலையில் இர்பானின் மரண செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். சீக்கிரமே எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள். சக்தி வாய்ந்த நடிகர். புற்றுநோயை எதிர்த்து போராடினார். அவரின் மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமா உலகுக்கும் சேர்த்து தான் என நடிகை சபானா ஆஷ்மி தெரிவித்துள்ளார்.

மாதவன்
53 வயதில் இர்பான் கான் மும்பையில் காலமானார். இதை கேட்டு என் இதயம் சோகமாகிவிட்டது. மிகச்சிறந்த நடிகர் மற்றும் நல்ல மனிதரை இந்த சினிமா உலகம் இழந்துவிட்டது. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம். மேலோகத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள் என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

சஞ்சய் குப்தா
இர்பான் மறைவு, வார்த்தைகள் வரவில்லை. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் நண்பரே. குடும்பத்தாருக்கு மனவலிமையை தர ஆண்டவனை வேண்டுகிறேன் என இயக்குனர் சஞ்சய் குப்தா கூறியுள்ளார்.

அனுபம் கெர்
அன்பு நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர் இர்பான் கான். அவரின் மறைவு செய்தியை கேட்டு இதயமே உடைந்து போனது. இன்றைக்கு மிகவும் சோகமான நாள். அவரின் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். ஓம் சாந்தி என நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார்.

ரவீணா டான்டன்
அருமையான சக நடிகர். மிகச்சிறந்த மனிதர். உங்களை சீக்கிரமாகவே இழந்துவிட்டோம். இந்த செய்தியை நம்ப முடியவில்லை. அமைதியாய் ஓய்வெடுங்கள் இர்பான். ஓம் சாந்தி என நடிகை ரவீணா டான்டன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

போனி கபூர்
மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரை இழந்துவிட்டோம். வாழ்வின் இறுதி வரை போராடினார். உங்களை தவறவிடுகிறோம் இர்பான். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

அக்ஷய் குமார்
மிகவும் அதிர்ச்சியான செய்தி. இர்பானின் மரண செய்தியை கேட்டு மனம் மிகவும் வருந்தியது. நமது காலத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த நடிகர் அவர். இந்த இக்கட்டான சூழலில் கடவுள் அவரது குடும்பத்திற்கு மன வலிமையை கொடுக்கட்டும் என நடிகர் அக்ஷய் கூறியுள்ளார்.

கஜோல்

இர்பான் மறைந்ததை கேட்டு வருத்தமடைந்தேன். என் இதயம் அவர்களின் குடும்பத்தை நோக்கியே செல்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். அமைதியாய் ஓய்வெடுங்கள் இர்பான் என நடிகை கஜோல் கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன்
போய் வாருங்கள் இர்பான். திரையில் உங்களின் அழகான மேஜிக்கிற்கு நன்றி. உங்களை எப்போதும் மிஸ் செய்கிறோம். உங்கள் ஆன்மா நிம்மதியாய் ஓய்வெடுக்கட்டும் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ்
இவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் எங்களை விட்டு சென்றது மிகவும் வேதனையளிக்கிறது. உலகளவில் உங்களின் கலைச்சேவைக்கு நன்றி. உங்களை இழந்து தவிக்கிறோம். நிம்மதியாய் ஓய்வெடுங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

ரித்தேஷ் தேஷ்முக்
உங்களின் மரணம் எங்களுக்கு இழப்பு, சொர்க்கத்தில் உள்ளவர்களுக்கு ஆதாயம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

மகேஷ்பாபு

இர்பானின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். திறமையான, புத்திசாலியான நடிகர் வெகு சீக்கிரத்தில் நம்மை விட்டு சென்றுவிட்டார். உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம். குடும்பத்தினருக்கு இரங்கல் என தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார்.

மலையாள பிரபலங்கள் இரங்கல்

மோகன்லால்
“இர்பான் கானின் மறைவு ரொம்பவே வருத்தப்பட வைக்கிறது.. அவரது ஆன்மா அமைதியாக ஓய்வெடுக்கட்டும்”

மம்முட்டி
“திரையுலகத்திற்கு வருத்தம் தரக்கூடிய மிகப்பெரிய இழப்பு.. உலகெங்கிலும் விரும்பப்பட்ட இயல்பாக நடிக்கக்கூடிய ஒரு மிகச்சிறந்த நடிகர் இர்பான் கான்... ஒருமுறை அவருடன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதையும் அப்போது அவருடன் உரையாடியதையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்”..

துல்கர் சல்மான்

“உலகளாவிய ஒரு அற்புதமான திறமைகொண்ட நடிகராக இருந்தீர்கள்.. கார்வான் படத்தில் நடித்தபோது எங்கள் அனைவரையும் ஒரேபோல நடத்தினீர்கள்.. அந்த படப்பிடிப்பு முழுதும் ஒரு ரசிகனாக உங்கள் நடிப்பை கவனித்ததுடன் ஒரு மாணவனாக உங்களிடம் நிறைய கற்றும் கொண்டேன்” என்று தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ள துல்கர் சல்மான் இந்தியில் தனது முதல் படமான கார்வான் என்கிற படத்தில் இர்பான் கானுடன் இணைந்து நடித்துள்ளார்.

பஹத் பாசில்
“அமெரிக்காவில் படித்துக்கொண்டு இருந்தபோது முதன்முதலாக உங்களது Yuh Hoya Toh Kya Hota' படத்தை பார்த்தேன்... முதன்முதலாக இயல்பாக நடிக்கும் ஒரு நடிகனை அப்போதுதான் பார்த்தேன்.. உங்களை பார்த்த பின்புதான் என்னுடைய எனது இன்ஜினீரிங் படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவுக்குள் நுழையும் ஆசையே எழுந்தது”

பார்வதி

“உங்களது வித்தியாசமான நடிப்பாலும் நடவடிக்கையாலும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கி உங்களை சுற்றியுள்ளவர்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தீர்கள்.. உங்களை எப்போதுமே நினைத்து பார்க்கிறேன்” என இர்பான் கான் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ள நடிகை பார்வதி, தான் நடித்த முதல் இந்திப்படமான 'க்வாரிப் க்வாரிப் சிங்கிள்' என்கிற படத்தில் இர்பான் கானுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கடும் மோதலில் தயாரிப்பாளர்கள், தியேட்டர்கார்கள்கடும் மோதலில் தயாரிப்பாளர்கள், ... கேரள தலைவர்களை இழிவு செய்யட்டுமா : இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கேரள தலைவர்களை இழிவு செய்யட்டுமா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
29 ஏப், 2020 - 19:27 Report Abuse
 Muruga Vel அருமையான நடிகர் .. இந்து பெண்ணை மனந்திருந்தாலும் அவரை இந்துவாகவே வாழ அனுமதித்தார் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in