Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தஞ்சை கோவில் சர்ச்சை - ஜோதிகா கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம் : சூர்யா

28 ஏப், 2020 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Tanjore-temple-issue-:-Suriya-stands-with-Jyothikas-statement

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பராமரிக்கும் விதமாக தொடர்பாக தஞ்சை பெரிய கோவிலை தொடர்புபடுத்தி நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையானது. இதற்கு இந்து மத தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது : மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்ற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதகமாகவும் மாறி உள்ளது.

கோவில்களை போல் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள், ஆன்மிக பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்சையை கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்க செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (201) கருத்தைப் பதிவு செய்ய
துல்கரிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னாதுல்கரிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா ஓடிடிக்கு ஆதரவு - தியேட்டர்கள் அழியாது : தாணு ஓடிடிக்கு ஆதரவு - தியேட்டர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (201)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
04 மே, 2020 - 20:05 Report Abuse
தாமரை செல்வன்-பழநி அப்பாவி ரசிகனின் மூடத்தனத்தால் காசு சம்பாதிக்கும் கூத்தாடி நீயெல்லாம் விவேகானந்தரை இழுக்கிறாய். அவ்வளவு மோசமாகி விட்டதா இந்த சமூகம்? பொண்டாட்டி செய்த தப்புப் பிரசங்கத்தை உறுதியோடு ஆதரிக்கும் நீ உன் பொண்டாட்டிக்கு தாசனாய் இருக்கலாம் எங்களுக்கு நீ நீசனாகி விட்டாய் . சிவக்குமார் சினிமாத்துறையில் எடுத்திருந்த நல்ல பெயரை உனது சமூகத்தை மீறி நிக்கா செய்து கெடுத்துவிட்டாய். அதிலிருந்து அவரும் மேடைகளில் வில்லங்கமாயும் வெறுப்பாயும் பேசி தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.எப்படியோ அடுத்த படத்துக்கு காசில்லாமல் மலிவாக காம ஹாசன் , ஜோசப் விஜய் போல மட்டமான முறையில் நீயும் விளம்பரம் தேடிக்கொண்டாய். ஆனால் ஒன்று சிவன் கோபம் குலம் நாசம் . இதை உன் காலத்திலேயே உணர்வாய்.
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
04 மே, 2020 - 18:24 Report Abuse
vbs manian நாமெல்லாம் சாமான்யர்கள். நமக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் திருமூலர் விவேகானந்தர் ஆகியோரை எதற்கு இழுக்க வேண்டும்.
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
03 மே, 2020 - 08:34 Report Abuse
S.Ganesan கோவில்களின் பாரம்பரியத்தையும் , அவற்றின் அடிப்படையான சமுதாய பணிகளை பற்றியும் இந்த அரைவேக்காடுகளுக்கு ஒன்றும் தெரியாது. இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் காசு , காசு , காசு மட்டுமே. இந்த கேடு கெட்டவர்கள் பேச்சை பெரிது பண்ணி இவர்களை பெரிய மனிதர்கள் ஆக்க வேண்டாம். இப்போது இவர்களுக்கு ஓசியில் விளம்பரம் கிடைத்து விட்டது. இதை வைத்து மேலும் காசு பண்ணுவதுதான் இவர்கள் புத்தி. இவர்களை சட்டை செய்யாமல் இருப்பது நல்லது.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
02 மே, 2020 - 04:10 Report Abuse
meenakshisundaram எதுக்கு நீங்க பிராமணராக ஆகணும்?அப்போ அவங்க உங்களை விட உயர்வு என்று சொல்கிறீர்களா ?தவறான கருத்துக்களை பதிப்பிடுவது இங்கே அவசியம் இல்லை .முடிந்தால் பிராமணர்களை போல வாழ்க்கை நடத்த முயற்சிக்கவும்.-முடிஞ்சா பக்கத்துலே உள்ள மஸூதியிலோ சிற்சில காசு வசூல் செஞ்சு நல்ல ஆசுபத்திரி நடத்தவனும்.வெளி நாட்டுக்கு போயும் மனசு வெளுக்க வேண்டாமா?
Rate this:
Covaxin - Bharat Hindustan,இந்தியா
01 மே, 2020 - 08:49 Report Abuse
Covaxin திருமூலரை எல்லாம் இழுக்குறான்யா... தம்பி சூர்யா.. திருமூலர் ஒண்ணும் இந்து மத்தை இழிவுபடுத்திட்டு மருத்துவமனைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் உதவி செய்ய சொல்லலை... இந்துமதத்தின் மேலயும் கோவில்கள் மேலயும் உங்க குடும்பத்துக்கு இருக்கிற வெறுப்புணர்ச்சி உங்க அறிக்கைகள்ல தெளிவா தெரியுது... இந்துமத வெறுப்பை பரப்புறதுக்கு உங்க அகரம் கல்வி நிறுவனத்தை கேடயமா பயன்படுத்திக்குறீங்க... அப்பத்தான் நம்மள யாரும் குத்தம் சொல்லமாட்டாங்கன்னு... கேடிடா நீயி...
Rate this:
மேலும் 196 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in